புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 04, 2020)

பிரகாசமுள்ள மனக்கண்கள்

யோவான் 6:69

நீர் ஜீவனுள்ள தேவனு டைய குமாரனாகிய கிறி ஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.


இயேசு இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களிலே, வேத பிரமாண ங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்தவர்களே அந்நாட்களில், யூதர்கள் மத்தியிலே இருந்த ஆலோசனை சங்கத்திலே அங்கத்தவர்களாக இருந்தார்கள். இவர்கள் இயேசுவின் சீஷர்களைப் பார்த்து, அவர்கள் கல்லாதவர்கள் என்று கூறிக் கொண்டார்கள். ஆனால் வேத பிரமாண ங்களை முறைப்படி கற்று பாண்டித்தியம் பெற்றுக் கொண்ட ஆலோ சனைச் சங்கத்திலே இருந்த பெரியவர் களுடைய மனக் கண்கள், அவர்கள் எதிர்பார்த்திருந்த மெசியாவாகிய இயே சுவை அறிந்து கொள்ள முடியாமல் இருளடைந்திருந்தது. அவர்கள் உள்ள த்திலே பெருமையும் அகங்காரமும் குடி கொண்டிருந்தது. பரிசுத்தராகிய இயே சுவின்மேல் குற்றம் சாட்டும்படிக்கு, ஆலோசனைச் சங்கத்திலிருந்த “பிர தான ஆசாரியரும் மூப்பரும் சங்கத் தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோ தமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள். ஒருவரும் அகப்படவில்லை. அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வ வில்லை.” (மத்தேயு 26:59-60) கற்று அறிந்து பாண்டித்தியம் பெற்றும் மெய்யான தேவனை அறிந்து கொள்ளாமல் இருப்பதைவிட, கற்றறியா மலிருந்தாலும் மெய்யான தேவனாகிய கர்த்தரை அறிந்து கொள்வதே மேலான பாக்கியம். தேவனை அறியமுடியாதிருக்கும் அறிவினால் இலாபம் என்ன? ஒன்றுமில்லை. இயேசுவின் சீஷனாகிய பிலிப்பு நாத்தா ன்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிக ளும் எழுதியிருக்கிறவரைக் (அதாவது மெசியாவை) கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான். இப்படியாக இயேசுவின் சீஷர்களும் நீர் தேவனுடைய குமாரன் என்று இயேசுவை நோக்கி கூறினார்கள். இவர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளும் இருதயம் உடையவர்களாக இருந்தார்கள். பிரியமானவர் களே, உங்களை சூழ இருக்கும் கற்றவர்களை குறித்து தியானிப்பது இன்றைய தியானத்தின் நோக்கமல்ல. மாறாக இயேசுவின் அழைப்பை ஏற்றுக் கொண்ட சீஷர்களைப் போல, தாழ்மையுள்ள இருதயம் உடையவர்களாகவும், எப்போதும் இயேசுவின் வார்த் தைகளை ஏற்றுக் கொள்ளும் பிள்ளைகளாகவும் நாங்கள் வாழ வேண்டும்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, பலவிதமான போதனைகளால் இழுப்பு ண்டு, உன்னதராகிய இயேசுவையும் அவருடைய வார்த்தைகளையும் மறந்து போய்விடாதபடிக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து நட த்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 1:47-51