புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 27, 2020)

மேன்மையானதை பற்றிக் கொள்ளுங்கள்

மத்தேயு 18:20

ஏனெனில், இரண்டுபேரா வது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங் கே கூடியிருக்கிறார்க ளோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.


பல கோடிக்கணக்கான டொலர்களை செலவழித்து அழகானதொரு ஆல யத்தை அமைக்கலாம். அதன் பெறுமதியினால் சர்வ வல்லமையுள்ள தேவனை, நம்மால் கவர்ந்து கொள்ளக் கூடுமோ? இல்லை. ஒரு சிறிய ஓலை கொட்டிலாக அமைக்கப்பட்டிருக்கும் ஆராதனை ஸ்தலத்தை கண்டு, இது என் தகுதிக்கு ஏற்புடையதல்ல என்று அதனை தேவன் புறம்பே தள்ளி விடுவாரோ? இல்லை. இந்த உலகிலே வாழும்வரை எங்கள் சரீரத்தை நாங்கள் பேணிப் பாதுகாக் கின்றோம். ஆனால் கொடுக்கப்பட்ட வாழ்நாட்களிலே சரீரத்திற்குரியவைக ளைவிட ஆத்துமாக்குரியவைகளைக் குறித்து மிக அதிகமாக கவனம் செலு த்த வேண்டும். அதுபோலவே, தேவ னை கூடி ஆராதிக் கும்படி ஆராதனை ஸ்தலங்களை கட்டி பேணிப் பாதுகா ப்பது நல்லது ஆனால் அதைவிட அங்கு கூடிவரும் மனிதர்களையும் அவர்களு டைய ஆத்துமாக்களைக் குறித்த கவனம் மிக அதிகமாக இருக்க வேண்டும். எங்கள் சரீரம் ஒரு நாள் மண்ணோடு அழிந்து போய்விடும். அதுபோலவே, வானமும் பூமியும் அதிலுள்ளவைகள் யாவும் அழிந்து போய்விடும். எங்கள் ஆத்துமா அழியாமையை தரித்துக் கொள்ளும் படிக்கு நாளுக்கு நாள் கிறிஸ்துவின் சாயலை அணிய வேண்டும். கட்டிடங்களின் அழகையும், மனித சரீரத்தின் வெளித் தோற்றத்தையும் பருமனையும் வைத்து தேவனுடைய சமூகம் மனிதர்கள் மத்தியில் வருவதில்லை. ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாம த்தினாலே எங்கே கூடியிருக்கிறார்க ளோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார். சற்று கவனித்து பாருங்கள் “எங்கே கூடியிருக்கி றார்களோ”. ஒரு வேளை அது இடாம்பிகரமான கட்டிடமாக இருக்கலாம் அல்லது எளிமையான கொட்டிலாக இருக்கலாம். எங்கே மனிதர்கள் இயேசுவின் நாமத்தில் ஒருமித்து வருகின்றார்களோ அவர்கள் நடுவே அவர் வாசம் செய்கின்றவராக இருக்கின்றார். தேவன் தாமே, அவன வன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்க தைக் கொடு க்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவராயுமிருக்கின்றார். பிரியமானவர்களே, எது மேன்மை யானதோ அதிலே அதிக கவனத்தை செலுத்துங்கள். நித்தியமானதை பற்றிக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, அநித்தயமானவைகள் எவை, நித்தியமான வைகள் எவை என்பதை ஆராய்ந்தறிந்து, நித்தியமானவைகளை பற்றிக் கொள்ளும்படிக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்தருள்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏரேமியா 17:10