புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 19, 2020)

சுய புத்தியின்மேல் சாயாதே

நீதிமொழிகள் 3:5

உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இரு தயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து


தமஸ்குவிலே அனனியா என்னும் பேருள்ள ஒரு சீஷன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி: நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு அவன் இப்பொழுது ஜெபம் பண் ணுகிறான். அவனும் அனனியா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடை யும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான் என்றார். அதற்கு அன னியா: ஆண்டவரே, இந்த மனுஷன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசு த்தவான்களுக்கு எத்தனையோ பொல் லாங்குகளைச் செய்தானென்று அவ னைக் குறித்து அநேகரால் கேள்விப்ப ட்டிருக்கிறேன். இங்கேயும் உம்முடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங் கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறானே என்றான். அதற்குக் கர்த்தர்: நீ போ. அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார். அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர் த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்படு ம்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான். உடனே அவன் கண்களி லிருந்து மீன் செதிள்கள் போன்றவைகள் விழுந்தது. சவுல் பார்வை யடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான். பிரியமாவர்களே, அனனியா என்ற ஊழியர் கூறியது உண்மை. சவுல் என்பவன், சபை யையும் கிறிஸ்தவர்களையும் அதிகமாக துன்பப்படுத்தி வந்தான். ஆனால் கிறிஸ்துவையுடையவர்கள் தாங்கள் அறிந்தவைகளினால் நடத் தப்படுகின்றவர்கள் அல்லர். அவர்கள் தேவ ஆவியினால் நடத்தப்படு கின்றவர்கள். தேவனுடைய ஆவியை பெற்ற நாங்கள் தேவ ஆவியி னால் நடத்தப்படுகின்ற வர்களாயிருக்கின்றோம். எங்கள் அறிவு, ஆற் றல் மட்டுப்படுத்தப்பட்டது அவைகளினாலே தேவனுடைய வழியை அறி ந்து கொள்ள முடியாது. எனவே எங்கள் அறிவின்படியல்ல தேவ ஆவி யின் வழிநடத்துதலின்படி நாங்கள் கிரியைகளை நடப்பிக்க வேண்டும்.

ஜெபம்:

அதிசயமான தேவனே, சுய புத்தியில் சாய்ந்து, உம்முடைய வழிகள் ஆச்சரியமானவைகள் என்பதை நான் ஒரு போதும் மறந்து விடாதபடிக்கு மனப்பிரகாசமுள்ள கண்களை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 8:9

Category Tags: