புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 16, 2020)

நன்மை செய்ய மறந்துவிடாதே

லூக்கா 6:35

அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே.


இயேசு ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, கு~;டரோகமுள்ள மனு~ர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று: இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பி யுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள். அவர்க ளில் ஒருவன் தான் ஆரோக்கியமா னதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப் படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான். அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்ப டுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பி வரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். பிரியமான சகோதர சகோதரிகளே, இந்த சம்பவத்தை சற்று மனக் கண்முன் கொண்டு வாருங்கள். நாங்கள் மற்றவர்களுக்கு நன்மை செய்யும் போது, நன் மையை பெற்றவர்கள் நன்றியறிதலுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். அப்படி, ஒருவர் நன்றியறிதலுள்ளவராக இருக்காவிடின், அவர் நன்றியற்றவன் என்று கூறிக் கொள்வோம். இந்த இடத்திலே இரண்டு விடயங்களை கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். முதலாவதாக, நாங்கள் கண்கண்ட சகோதரருக்கும், கண் கணாத தேவ னுக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோமா? கிறிஸ்தவ பண்புடை யவன் நன்றியுள்ளவனாக இருக்கின்றான். எனவே நாம் நன்றிய றிதலுள்ளவர்களாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, குணப்பட்ட பத்துப் பேரில் ஒன்பது பேரை காணவில்லை. அதனால் இயேசு நன்மை செய்வதை விட்டுவிட்டாரா? இல்லை. அவர் எப்போதும் எவ்வேளையும் நன்மை செய்கின்றவராகவே இருக்கின்றார். மற்றவனுடைய நன்றியற்ற நிலையை கண்டு நீங்கள் கசப்படைந்து போய்விடாதிருங்கள். எங்கள் பிதாஇரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நாங்களும் இரக்கமுள்ளவர்க ளாக இருக்க வேண்டும். எனவே பிதாவாகிய தேவனுக்கு நன்றி யறிதலுள்ளவர்களாய் இருப்பதும், கைமாறு கருதாமல் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் ஒரு கிறிஸ்தவனுடைய பண்பு. அந்த நற்பண்பிலே நாளுக்கு நாள் வளருங்கள்.

ஜெபம்:

இரக்கங்களின் தகப்பனே, நீர் எனக்கு தந்த இந்த மகத்துவமுள்ள அழைப்பிற்காக நன்றி. இந்த உலகிலே வாழும்வரைக்கும் கைமாறு கருதாமல் நன்மை செய்ய எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - லூக்கா 17:12-19