புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 22, 2020)

தேவனுக்கு உகந்த பலி

சங்கீதம் 51:17

தேவனே, நொறுங்குண் டதும் நருங்குண்டது மான இருதயத்தை நீர் புறக்கணியீர்.


இந்த பூலோக செல்வத்தினால் எவற்றை வாங்க முடியும்? ஏறத்தாழ மனிதனுடைய கட்டுப்பாட்டிலிருக்கும் யாவற்றையும் பூலோகத்தின் செல் வத்தினால் பெற்றுக் கொள்ளலாம். ஒரு வேளை உலக ஐசுவரிய த்தினால் இந்தப் பூமியிலுள்ள மனிதர்களை நாங்கள் பிரியப்படுத்தலாம். மனிதர்கள் மத்தியிலே நற்பெயரை வாங்கிக் கொள்ளலாம். ஏனெனில் சபைகளிலே கூட ஐசுவரியமுள்ள மனி தர்கள் அதிக கனத்தோடு உபசரிக்க ப்படுகின்றார்கள் என்று பரிசுத்த வேதா கமம் கூறுகின்றது. “ஏனெனில், பொன் மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒரு மனு~னும், கந்தை யான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரு ம்போது, மினுக்குள்ள வஸ்திரந்தரி த்தவனைக் கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும்; தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதப டியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால், உங்களு க்குள்ளே பேதகம்பண்ணி, தகாத சிந்தனைகளோடே நிதானிக்கிறவ ர்களாயிருப்பீர்களல்லவா?” (யாக்கோபு 2:2:4). ஆனால், இந்த உலக த்தின் ஐசுவரியத்தினால் தேவனுடைய காரியங்களை வாங்கிக் கொள்ள முடியாது. “என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வு லகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிட த்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்ய த்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?” (யாக் கோபு 2:5). இது மனிதனுடைய வார்த்தை அல்ல, தேவ ஆவியினாலே அருளப்பட்ட வார்த்தை. வெறும் பலிகளின் திரள்களினால் தேவனைப் பிரியப்படுத்த முடியாது. (ஏசாயா 1:11). பலியை நீர் விரும்புகிறதி ல்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமா னதல்ல. (சங் 51:16). அதுபோலவே எங்கள் காணிக்கைகள், அன்னதா னங்களினால் தேவனைப் பிரியப்படுத்தக் கூடுமோ? (1 கொரி 13:1-3). இவைகள் எல்லாம் தேவனுக்கு பிரியமான சுகந்த வாசனையாக இரு க்க வேண்டும் என்றால், எங்கள் இருதயம் தேவனுக்கேற்றதாக இரு க்க வேண்டும். கடின இருதயத்தில் தேவன் பிரியப்படமாட்டார். அங்கே உலகத்தின் பெருமை குடியிருக்கும். நொறுங்குண்டதும் நரு ங்குண்ட துமான இருதயத்தை கர்த்தர் புறக்கணிக்கமாட்டார். அப்படிப்பட்ட இருத யத்திலிருந்து வரும் கிரியைகள் தேவனுக்கு உகந்ததாயிருக்கும்.

ஜெபம்:

பரலோக தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்;டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமக்கு உகந்த வாழ்க்கை வாழும்படிக்கு என்னை நடத்திச் செல்வீராக.இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாப்கோபு 2:1-7