புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 12, 2020)

இருதயம்

1 சாமுவேல் 16:7

மனுஷன் முகத்தைப் பார் ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப்பார்க்கிறார் என் றார்.


மனிதனுடைய இருதயத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து பரிசுத்த வேதாகமத்திலே பல இடங்களிலே குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுள் சில கீழே தரப்பட்டுள்ளது. இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கி~த்திலிருந்து நல்லவை களை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக் கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். (மத்தேயு 12:34). எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயி ருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்? (எரேமியா 17:9). வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிரு ந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனு ஷனைத் தீட்டுப்படுத்தும். (மாற்கு 15:18). நல்ல நிலத்தில் விதைக்கப்ப ட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத் திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள். (லூக்கா 8:15) உன் தேவ னாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்து மாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை (மாற்கு 12:30) இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது. (மத்தேயு 15:8) மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இரு தயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு (ஆதியாகமம் 6:5) நான் இஸ்ரவேல் குடும்பத் தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது. நான் என் நியாயப்பிர மாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். (எரேமியா 31:33). மனுஷன் முகத்தைப் பார்ப்பான்;. கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். பிரியமான சகோதர சகோதரிகளே, அவரவர் தங்கள் இருதயத்தை தேவ வார்த்தையின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்நாட்களிலே, நாங்கள் எங்கள் இருதயத்தை எல்லா காவலோடும் காத்துக் கொள்ள வேண்டிய தன் முக்கியத்துவத் தைப் பற்றி இன்னும் அதிகமாகய்ச் சிந்தித்துப் பார்ப்போம்.

ஜெபம்:

இருதயத்தை ஆராய்ந்து அறிகின்ற தேவனே, இதயபூர்வமாக உம்மை சேவிக்கும்படிக்கு என் குறைகளை உணர்ந்து, மனந்திரும்பும் உணர்வுள்ள இருதயத்தை தந்து என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 9:1