புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 09, 2020)

கண்டடையத்தக்க சமயம்

ஏசாயா 55:6

கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.


மகனே, எங்கே போகின்றாய்? உன் வீட்டுப்பாடங்களை ஒழுங்காக படி க்கின்றாயா? என்ற தந்தையாரின் தயவான குரல், மகனானவனின் மனதில் அவ்வப்போது தொனித்துக் கொண்டிருந்தது. “ஆம், படிக்கின் றேன் அப்பா, அதற்காகத்தான் என் நண்பர்களுடன் சேர்ந்து படிக்கு ம்படி போகின்றேன்” என்று கூறிவிட்டு, தன் நண்பர்களுடன் நேரத்தை விரயப்படுத்தின நாட்களை நினைக்கும் போது, தந்தையார் இவ்வுலகத்தை விட் டுச் சென்று பல ஆண்டுகள் கடந்து சென்ற பின்பும் மகனானவனின் மனம் வேதனைப்பட்டது. பல க~;டங்கள் மத் தியிலே, நாளாந்த ஊதியத்திற்கு சென் று, தன் பிள்ளைகள் படிக்க வேண்டும், தன்னைப் போல கஷ்டப்படக்கூடாது என்ற நோக்கத்தோடு, தந்தையார் உழை த்து வந்தார். பிரியமானவர்களே, எங்கள் வாழ்க்கையை சற்று சிந்தித் துப் பாருங்கள். தாயின் கருவினில்; எங்களைத் தெரிந்து கொண்ட தேவன், பரிசுத்த வாழ்க்கை வாழும்படிக்காகவே எங்களை பிரித்தெடுத்தார். எங் கள் ஆத்துமாவை பாதாளத்தினின்று விலக்கும்படிக்கு, தம்முடைய ஒரே பேறான குமாரனை எங்கள் பாவங்களுக்காக பலியாக ஒப்புக் கொடு த்தார். தம்முடைய குமாரனோடு கூட உன்னதத்திலுள்ள ஆசீர்வா தங்களால் எங்களை ஆசீர்வதித்திருக்கின்றார். நாங்கள் தாபரிக்கும் நிலையான நகரத்திற்கு சென்றடையும்படி எங்களை நடத்திச் செல்கி ன்றார். காரியம் இப்படியாக இருக்கும் போது, இந்த மகத்துவமான அழைப்பை அற்பமாக எண்ணி எங்கள் வாழ்நாட்களை விரயப்படுத்து வோதுமாக இருந்தால் மனவேதனையான நாட்களையே சந்திக்க நேரிடும். இந்த உலகத்திலுள்ள தகப்பன்மார்களுடைய அறிவும் ஆற்ற லும் மட்டுப்ப டுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், சர்வ வல்லமையுள்ள, பரம தந்தைக்கு மறைவாக எங்கே செல்ல முடியும்? இருதயத்தையும் அதன் நினைவுகளையும் ஆராய்ந்தறிகின்ற பரிசுத்தருக்கு பொய் சொல்ல முடியுமா? ஒரு வேளை எங்களை வழிநடத்தும் எங்கள் பெற் றோர், ஆசிரியர்கள், தேவ ஊழியர்கள், உலகத்தின் எஜமான்களுக்கு நாங்கள் சாட்டுப்போக்குச் சொல்லி தற்காலிகமாக தப்பித்துக் கொள் ளலாம். ஆனால் காலம் கடந்து போகுமுன்பு, தேவனிடத்தில் திரும்பு ங்கள். அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். பொல்லாப்பின் நாட்கள் சூழ்ந்து கொள்ள முன்பு, அவருடைய பாது காப்பிற்குள் வந்து சேருங்கள்.

ஜெபம்:

எங்கள் மீது அன்பு கூர்ந்து உம்முடைய குமாரனை எங்களுக்காக கொடுத்த பரம தந்தையே, உம்முடைய அன்பை மறந்து உணர்வற்று போகாதபடிக்கு என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 90:12