புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 04, 2020)

தேவ குமாரனின் அடையாளம்

எபிரெயர் 12:3

தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்ப ட்ட இவ்விதமான விபரீ தங்களைச் சகித்த அவ ரையே நினைத்துக்கொள் ளுங்கள்.


“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16). இந்த நேச குமாரனாகிய இயேசு பரிசுத்தரும், குற்ற மற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்க ளிலும் உயர்ந்தவருமாயிருக்கின்றார். (எபிரெயர் 7:26). இவரது தெய் வீக சுபாவங்கள் இவரில் சம்பூரணமாக இருந்தது. தேவனுடைய குமாரன் என் னும் அடையாளத்தையுடையவராக எப் போதும் இருக்கின்றவராய் இருக்கின் றார். தேவனுடைய குமாரன் என்பதற் கு, இந்த உலகத்திலுள்ள அடையா ளங்கள் இவருக்கு வேண்டியதா யிரு க்கவில்லை. தேவத்துவத்தின் பரிபூரண மெல்லாம் இவரில் நிறைவாக இருந் தது. இவர் தேவனுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம் முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மா லேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத் திகரிப்பை உண்டுபண் ணும் பொருட்டு, மரத்திலே தூக்கப்பட்டார். அவர் அசட்டைபண் ணப் பட்டவரும், மனு~ரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவ ரும், பாடு அநுபவித்த வருமாயிருந்தார். அவர் அசட்டைபண்ணப்பட்டி ருந்தார்; மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்;. நம்முடைய மீறுதல்களி னிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினி மித்தம் அவர் நொறு க்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நம்முடைய அக்கிரமம் அவர் மேல் விழுந்தது. அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப் பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில் லை. இப்படிப்பட்ட அவமானமும், நிந்தையும் நிறைந்த பாடுகளையும் சகித்தார். தமக்காக அல்ல, மனித குலத்திற்காக இந்த அடையளங் களை அவர் தன் சரீரத்தில் தரிப்பித்துக் கொண்டார். ஆகையால் நீங் கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்து போ காதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்வி தமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, மானிடர் மீட்படையும்படிக்கு தமக்கு விரோதமாக வந்த அவமானம் நிந்தைகளை சகித்த இயேசுவைப் போல வாழும்படிக்கு என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1-3