புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 31, 2020)

நன்மைகளை அனுப்பி வைப்பார்

அப்போஸ்தலர் 10:4

உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது.


இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிப தியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனு~ன் செசரியா பட்டணத்திலே இருந்தான். அவன் தேவபக்தியுள்ளவனும் தன்வீட்டார னைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங் களுக்கு மிகு ந்த தருமங்களைச் செய்து, எப்பொ ழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண் ணிக்கொண்டிருந் தான். பகலில் ஏறக் குறைய ஒன்பதாம் மணிநேரத்திலே தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே, என்று அழை க்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங் கண்டு, அவனை உற்றுப்பார்த்து, பய ந்து: ஆண்டவரே, என்ன, என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்க ளும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நி தியில் வந்தெட்டியிருக்கிறது. இப்பொழுது நீ யோப்பா பட்டணத்துக்கு மனுஷரை அனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழை ப்பி. அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத் திலே தங்கியிருக்கிறான்;. அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான். எப்படி யாக தேவனுடைய தூதனானவர், இஸ்ரவேலன் அல்லாத ஒரு புறஜாதி மனிதனிடம் அனுப்பப்பட்டார் என்று பாருங்கள். எங்களை நேசிக்கும் தேவன் எங்களோடு பல வழிகளிலே உறவாடுகின்றார். நாங்கள் வேத வார்த்தைகளை வாசிக்கும் போது உணர்வடையச் செய்கின்றார். சக விசுவாசிகள் வழியாக பேசுகின்றார். சபை போதகர் வழியாக நாங்கள் செய்ய வேண்டியவைகளை போதிக்கின்றார். சொப்பனங்கள், தரிசன ங்கள் வழியாக இடைப்படுகின்றார்;. அது மட்டுமல்ல, அவர் விண்ணி லிருந்து தேவ தூதர்களை தினமும் அனுப்புகின்றார். இவை நாங்கள் அறியாத, எங்களை சூழ இருக்கும் ஞான நன்மைகளாயிருக்கின்றன. உன் வழிகளி லெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடை ய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். (சங் 91:11). அவர்களுக்குரிய தேவ தூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத் 18:10). எனவே திடன் கொள்ளுங்கள். உங்கள் ஜெபங்களும் நற்கிரியைகளும் வீண் போவதில்லை. அவைகளை தேவன் அறிந்திருக்கின்றார். அவர் குறித்த காலத்திலே பெரிதான நன்மைகளை அனுப்பி வைப்பார்.

ஜெபம்:

உம்முடைய தூதர்களை அனுப்பி எம்மை காக்கும் தெய்வமே, உம்மு டைய அன்பின் ஆழத்தை நான் மறந்து போகாதாபடிக்கு, உணர் வற்ற இருதயத்தை எனக்கு தூரப்படுத்துவீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 34:7