புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 24, 2020)

மிகுந்த கனி தரும் வாழ்க்கை

யோவான் 15:7

நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வ தெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.


தேவனுடைய வசனம் எங்கள் கால்களுக்கு தீபமும், பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கின்றது. அவருடைய வார்த்தைகள் அநேகமாயிரும் பொன் வெள்ளிகளைப் பார்க்கிலும் அருமையானது. தேவ வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போ லும் இருக்கிறது. வேத வார்த்தைகள், எங்களை தேறினவர்களாக்கி, எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியு ள்ளவர்களாக மாற்றுகின்றது. அவை கள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளு தலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ள வைகளாயிருக்கிறது. வானமும் பூமி யும் ஒழிந்து போனாலும், தேவனுடைய வார்த்தைகள் ஒழிந்து போவதில்லை. தேவனுடைய வார்த்தை எங்கள் ஆவி க்குரிய உணவு. ஆத்துமாவின் ஒள~ தம். இப்படியாக தேவனுடைய வார்த் தையானது எங்கள் வெற்றி வாழ்க்கைக்கு இன்றியமையா ததாயிருக்கி ன்றது. கர்த்தருடைய வசனம், அவருடைய சாட்சிகள், பிரமாணங்கள், கற்பனைகள், கட்டளைகள் யாவும் எங்களுக்கு ஆரோக்கியத்தை தரு கின்றது. கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். (சங் 119:1), கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிரு ந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனு ~ன் பாக்கியவான். (சங் 1:2), அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனு~ன் பாக்கியவான். (சங் 112:1), கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நட க்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். (சங் 128:1). பிரியமான சகோதர சகோதரிகளே, விரும்பினால் வாசிக்கலாம், விருப்பமில்லை யென்றால் விட்டுவிடலாம் என்று வேதத்தை நாங்கள் புறக்கணித்து வாழ முடியாது. இந்த உலகத்தின் ஞானம் அழிவுக்குரியது. ஆனால் வேதம் தரும் ஞானம் தெய்வீகமானது. அது பரத்திலிருந்து வருகின்ற நித்திய ஞானம். ஆயுதங்கள் இல்லாமல் யுத்த களத்தில் நிற்பவனைக் குறித்து என்ன சொல்வீர்கள். அதே போலவே, வேத வார்த்தைகள் உங்களில் நிலைத்திருக்காவிட்டால், ஆயுதம் இல்லாமல் ஆவிக்குரிய யுத்த களத்தில் நிற்கின்ற ஞானமற்ற பிள்ளைகளைப் போல இருப்போம். எனவே வேதத்தை வாசியுங்கள், அதிலே நிலைத்திருங்கள், அப்போது மிகுந்த கனிகளைக் கொடுப்;பீர்கள். பிதா உங்களில் மகிமைப்படுவார்.

ஜெபம்:

வாழ்வு தரும் வசனத்தை உடையவரே, உம்முடைய வார்த்தையி னாலே நான் பக்திவிருத்தியடைந்து, உமது வழியிலே என் காலடிகள் ஸ்திரப்படும்படி என்னை வழிநடத்திச் செல்வீராகஇரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 119: 130