புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 23, 2020)

சூழ்நிலைகளை நிதானித்து அறியுங்கள்

1 கொரிந்தியர் 2:15

ஆவிக்குரியவன் எல்லா வற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனா லும் அவன் மற்றொருவ னாலும் ஆராய்ந்து நிதா னிக்கப்படான்.


எங்களுடைய ஐக்கியம் கிறிஸ்துவோடும், கிறிஸ்துவைச் சார்ந்தவ ர்களோடும் இருக்க வேண்டும் என்பதைக் குறித்து கடந்த தினங்களிலே தியானித்து வந்தோம். கிறிஸ்துவோடும், கிறிஸ்துவைச் சார்ந்தவர்க ளோடும் ஐக்கியமாக இருக்கின்றோம் என்பதை நாங்கள் எப்படி ஆரா ய்ந்து அறிந்து கொள்வது? இயேசுவின் இரத்தத்தினாலே பாவமறக் கழுவப்பட்டு, அருமையான மீட்பைப் பெற்றுக் கொண்டோம். அதாவது இரட் சண்ணியத்தின் சந்தோ~த்தை எங்க ளுக்கு கொடுத்து சத்திய ஆவியாகிய தேற்றரவாளனை எங்களுக்கு கொடுத் திருக்கின்றார். அவர் எங்கள் துணை யாளராக எங்களோடு இருந்து, எங்களு க்குள்ளே வாசம் செய்து, எங்களை சக ல சத்தியத்திலும் வழிநடத்துகின்றவரா யிருக்கின்றார். நாங்கள் நடக்க வேண் டிய சத்தியமானது, பரிசுத்த வேதாகமம் வழியாக எங்களுக்கு போதிக்கப்படுகின்றது. அந்த வார்த்தைகளை விளங்கிக் கொள்ளும்படியாக துணையாளராகிய தூய ஆவியானவர் எங்களுக்கு உதவி செய்கின்றார், ஊக்குவிக்கிறார். அவர் எங்களுக்கு சுத்த மனட்சாட்சியை தந்து, இருளான உலகத்திலே, பாவ இருள் எங் களை மேற்கொள்ளாதபடிக்கு தெளிவாக பார்க்கும்படிக்கு பிரகாச முள்ள மனக்கண்களை தந்திருக்கின்றார். எனவே இன்று நீங்கள் பரி-சுத்த வேதாகமத்தை, தனித்திருந்து வாசித்து, தியானம் செய்து, அத ன்படிக்கு நாளுக்கு நாள் உள்ளான மனு~னில் வளர்ச்சியடைகின்றவ ர்களாக இருந்தால், நீங்கள் தனித்திருந்து தேவனுடைய பாதத்திலே ஊக்கமாக ஜெபிக்கின்றவர்களாக இருப்பீர்கள். இவை இரண்டும் உங் கள் வாழ்வில் இருக்கும் போது, நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் நிலை த்திருப்பவர்களாக இருப்பீர்கள். தூய ஆவியானவரை துக்கப்படு த்தா திருப்பீர்கள். அதனால், கிறிஸ்துவையும், கிறிஸ்துவினுடையவர்க ளை யும் நிதானித்து அறிவீர்கள். ஆனால், தனித்திருந்து வேதத்தை வாசி த்து, தியானிக்கின்ற பழக்கம் உங்களில் இல்லாதிருக்குமென்றால், காரி ருள் நிறைந்த உலகத்திலே, பாதை தெளிவாக தெரியாதவர்களாக, பல தவறான முடிவுகளை உங்கள் வாழ்வில் எடுக்கின்றவர்களாயிருப்பீ ர்கள். தனித்திருந்து வேதம் வாசிப்பதற்கும், தனித்திருந்து ஜெபிப்ப தற்கும் மாற்றீடான காரியங்கள் ஒன்றுமில்லை. வேதத்தை தினமும் வாசியுங்கள், தனித்திருந்து ஜெபியுங்கள், தேவ ஆவியானவர்தாமே சகல சத்தியத்தி லும் உங்களை வழிநடத்திச் செல்வார்.

ஜெபம்:

ஞானம் நிறைந்த தேவனே, இந்த உலகத்தின் போக்கோடு நான் ஐக்கியப்படாதபடிக்கு, அவைகளை நிதானித்து அறியும்படிக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்து வழிநடத்துவீராக. இர ட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 25:13