புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 22, 2020)

தேவனுடைய வீட்டார்

எபேசியர் 2:19

பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவ னுடைய வீட்டாருமாயிருந்து,


முற்காலங்களிலே நாங்கள்? கிறிஸ்துவைச் சேராதவர்களும், தேவ ஜனங்களுடைய சுதந்திரத்திற்கு புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வு லகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தோம். நாமெல்லாரும் முற்காலத் திலே நமது மாம்ச இச்சையின்டியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத் தினாலே மற்றவர்களைப்போலக்கோ பாக்கினையின் பிள்ளைகளாயிருந் தோம். அக்கிரமங்களினாலும் பாவங்க ளினாலும் மரித்தவர்களாயிருந்த எங் களை தேவன் உயிர்ப்பித்தார். கிருபை யினாலே விசுவாசத்தைக்கொண்டு இர ட்சிக்கப்பட்டோம். இது எங்களால் உண் டானதல்ல, இது தேவனு டைய ஈவு. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டான தல்ல. முன்னே தூரமாயிருந்த நாங்கள் இப்பொழுது கிறிஸ்து இயே சுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானோம். இன்று, எங்கள் உறவுகள், பந்துள்ளோர்கள், நண்பர்கள் நாங்கள் முற் காலத்திலே இரு ந்தது போல கிறிஸ்துவுக்கு அந்நியராயிருக்கின் றார்கள். அவர்களை நானோ அல்லது நீங்களோ இரட்சிக்கக்கூடுமோ? எங்களுடைய கிரியை கள் அவர்களின் பாவங்களை மன்னிக்குமோ? இல்லை! ஆனால் நீங்கள் அவர்களை நேசித்தால், நற்செய்தியைக் கூறுங்கள். தேவ கிரு பையானது அவர்கள் வாழ்வில் வெளிப்படும்படிக்கு அவர்களுக்காக ஊக்கமாக ஜெபியுங்கள். இரட்சிப்பு தேவனுடையது. ஆனால், தேவ னுடைய வார்த்தைகளுக்கு விரோதமாக நாங்கள் ஒரு அந்நிய ஐக்கி யத்தை ஏற்படுத்துவோமாக இருந்தால். நாங்கள் கிறிஸ்துவை அறிய முன்பு எங்கள் மனதும் மாம்சமும் விரும்பினதை செய்தது போல, நாங்கள் விரும்புகின்றவர்களை தேவன் இரட்சிக்க வேண்டும் என்ற எண்ணமுள்ளவர்களாயிருப்போம். ஒருவரும் மேன்மை பாராட்டதபடி க்கு இரட்சிப்பானது தேவ கிருபையினால் உண்டாகின்றது. உங்கள் வா ழ்வில் தேவன் தகர்த்துப்போட்ட பாவத்திற்கு இட்டுச்செல்லும் பால த்தை (டீசனைபந) நீங்கள் மறுபடியும் கட்டாதிருங்கள். வேத வார்த்தைகள் விருதா வாய் எழுதப்படவில்லை. ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவ னுடைய வீட்டாருமாயிருந்து, கிறிஸ்துவின் மேல், இசைவாய் இணை க்கப்பட்டு, பரிசுத்த ஆலயமாக வாழ வேண்டும்.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வு வாழும்படி அழைத்த தேவனே, மூலைக்கல்லாகிய கிறிஸ்துவின்மேல் ஊன்றக் கட்டப்பட்டு, பரிசுத்த ஆலயமாக, உம்முடைய வீட்டாராக திகழும்படிக்கு எங்களை வழிநடத்துவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 26:11