புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 19, 2020)

வேண்டப்படாத இன்னல்கள் ஏன்?

சங்கீதம் 119:142

உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.


வாடகை வீட்டில் வசித்து வந்த ஒரு தம்பதியினர், தங்களுக்கு சொந் தமான ஒரு வீட்டை வாங்குவதற்காக அடைமான வங்கி கடனை பெற் றுக் கொள்ளும்படிக்கு, ஒரு அடைமான முகவரை சந்திக்க சென்றிருந்தா ர்கள். அவர்களது வருடாந்த வருமானத்தையும், செலவுகளையும் மீளா ய்வு செய்த பின்பு, வங்கியாளர் தன் அறிக்கையை அவர்களிடம் சமர் ப்பித்தார். அதன்படிக்கு, அவர்களின் தற்போதைய வருமானத்தின் அடிப்ப டையில், அவர்கள் குறிப்பிட்ட வீட்டை வாங்குவார்களாக இருந்தால், பொரு ளாதார நெருக்கடியை சந்திக்க நேரி டும் என்று வங்கியாளர் ஆலோசனை கூறினார். “எங்கள் அயலிலுள்ள அந்த மனிதனைப் பாருங்கள், அவன் எங்க ளைவிட அதிகமாக உழைப்பதில்லை, ஆனால் அவன் வசிக்கும் வீட்டைப் பாருங்கள். அவன் தன் அடைமானக் கடனை கட்ட முடியும் என்றால், நாங்கள் ஏன் கட்ட முடியாது” என்று வீடு திரும்பும் போது, மனைவி தன் கணவனிடம் கூறிக் கொண்டாள். இந்த சம்பவத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள். வங்கியாளர் இவர்களுக்கு கூறிய ஆலோசனை நன்மையானது. அடைமானத்தை பெறுகின்றவர்களுக்கும், அதை கொடு க்கும் வங்கிக்கும் ஏற்புடைய ஆலோசனை. ஆனால், மற்றவனுடைய நிலையைப் பார்த்து நல்ல ஆலோசனைகளை தள்ளிவிட்டால், வாழ்வில் பெரும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம். வேதம் சத்தியம்! தேவன் விருதாவாய் வேத வார்த்தைகளை விளம்பவில்லை. எடுத்துக் காட்டாக, ஒரு உதவி ஊழியக்காரன் எப்படி இருக்க வேண்டும் என்று வேதம் தெளிவாக கூறுகின்றது. (1 தீமோ 3:1-10). மேலும், இவர்கள் முன்ன தாகச் சோதிக்கப்படவேண்டும்; குற்றஞ்சாட்டப்படாதவர்களானால் உதவி க்காரராக ஊழியஞ்செய்யலாம். இந்த ஆலோசனை, உதவி ஊழியனின் தகுதி மட்டுமல்ல, இன்னும் அதிகமாக, சபைக்கும், ஊழியத்திற்கும், விசுவாசிகளுக்கும், உதவி ஊழியனுக்கும், அவன் குடும்பத்திற்கும், யாவரினதும்; ஆவிக்குரிய ஆரோக்கியத்திற்கும் நன்மையான ஆலோச னை. என்னைவிட தகுதியற்றவன் செய்கின்றான், நான் செய்தால் என்ன என்ற அடிப்படையில் நாங்களும் செய்ய ஆரம்பித்தால், பெரும் நோவுகள், பிரிவினைகள் உண்டாகக் கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். இவ்வண்ணமாக, வேதத்தின் ஆலோசனைகளை நாங்கள் தள்ளிவிடும் போது, எங்கள் வாழ்க்கையில் பல வேண்டப்படாத இன்னல்களுக்கு முகங் கொடுக்க வேண்டியதாயிருக்கும்.

ஜெபம்:

வாக்குரைத்த தேவனே, உம்முடைய வார்த்தைகள் சத்தியமான வைகள் என்பதை எப்போதும் உணர்ந்தவனா(ளா)க, அதன்படி வாழும் படிக்கு ஞானமுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 3:16