புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 13, 2020)

புதிதும் ஜீவனுமான வாழ்க்கை

2 பேதுரு 2:20

கர்த்தரும் இரட்சகருமா யிருக்கிற இயேசுகிறிஸ் துவை அறிகிற அறிவி னாலே உலகத்தின் அசுத் தங்களுக்குத் தப்பினவர் கள் மறுபடியும் அவைக ளால் சிக்கிக்கொண்டு ஜெ யிக்கப்பட்டால், அவர்க ளுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.


பல வருடங்களாக புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்த மனிதன், பல பாடுகள் மத்தியிலே, அந்த அடிமைத்தனத்திலிருந்து பெரிதான விடுதலையைப் பெற்றுக் கொண்டான். நீ முன்பு செய்தது போல தொடர்ச்சியாக புகைக்காமல், என்னை போல அவ்வப்போது புகைப் பதில் தவறில்லை என்று அவன் தந்தையார் கூறிக் கொண்டார். அவன் நண்பர்களில் சிலர் இன்னுமாய் புகை த்துக் கொண்டிருந்தார்கள். அதனால் அவன், தன் தந்தையாரையும், நண் பர்களையும் அற்பமாக எண்ணி வெறு த்து தள்ளிவிட வேண்டுமோ? இல்லை! முதலாவதாக, மறு படியும் பழைய பாவ பழக்கத்கை; குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிலே எந்த சமரசமும் இருக்கக் கூடாது. இரண்டாவதாக, அவர்களும் தன்னைப் போல புகைப்பிடிக்கும் பழ க்கத்திலிருந்து விடுதலையாக வேண் டும் என்ற எண்ணமுடையவனாக இரு க்க வேண்டும். அவன் தன்னை பழைய அடிமைத்தனத்திலிருந்து காத்துக் கொ ள்ள வேண்டுமாயின், மறுபடியும் பாவ சோதனையிலிருந்து தன்னை விலக்கி க் கொள்ள வேண்டும். அதனால், தன் தந்தையையோ, நண்பர்களையோ வெறுத்துத் தள்ளுவது என்பது பொருள் அல்ல. அது போலவே, இயேசு கிறிஸ்து வழியாக மீட்பை பெற முன்பு இருந்த பழைய வாழ்க்கைக்கு நாங்கள் திரும்பாதபடிக்கு எங்கள் இருதயத்தை எல்லா காவலோடும் காத்துக் கொள்ள வேண்டும். “அவர்களோடு சேர்ந்திருந்தால் என்ன” “இதை புசித்தால் என்ன குற்றம்” “அதை ஒரு முறை பார்த்தால் என்ன தவறு” என்று இன்றைய நாட்க ளிலே தேவனுடைய அழைப்பைப் பெற்ற ஜனங்கள் பற்பல கேள்வி களை கேட்கின்றார்கள். தேவன் தந்த விலை மதிக்க முடியாத இரட்சி ப்பை காத்துக் கொள்வது எங்கள் பொறுப்பு. தேவன் தந்த இரட்சிப் பை அற்பமாக எண்ணி, எங்கள் வாழ்க்கையை மறுபடியும் பழைய வாழ்க்கைக்குட்படுத்தும்படி சமரசம் செய்யக் கூடாது. எங்களை நாங் களே திரும்பத் திரும்ப சோதனைக்குட்படுத்தாதபடிக்கு ஞானமுள்ள பிள்ளைகளாக நடந்து கொள்ள வேண்டும்.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வு வாழும்படி அழைத்த தேவனே, மறுபடியும் பாவ வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும் வழிகளில் நடக்காதபடிக்கு பரிசுத்த வாழ்வு வாழும்படி ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 4:4