புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 08, 2020)

விளையச் செய்யும் தேவன்

1 கொரிந்தியர் 3:7

அப்படியிருக்க, நடுகிறவ னாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச் செய்கிற தேவனாலே எல் லாமாகும்.


தேவ ஊழியராகிய பவுலின் நாட்களிலே கொரிந்து பட்டணத்திலே இருந்த விசுவாச குடும்பங்களின் மத்தியில் பிரிவினைகள் ஏற்பட்டிரு ந்தது. அவர்கள் மத்தியிலே பொறாமையும், வாக்குவாதமும், பேதங்க ளும் இருந்து வந்தது. ஒரு குழுவினர் தாங்கள் தேவ ஊழியராகிய பவுலை சேர்ந்தவர்களளென்றும், வேறு சிலர் தாங்கள் அப்பொல்லோ என்னும் தேவ ஊழியரைச் சேர்ந்தவர்கள் என்றும், இன்னுமொரு சாரார் தாங்கள் கேபாவை (சீமோன் பேதுரு) சேர்ந்தவர்கள் என்றும் பிரிந்திருந்தா ர்கள். இப்படிப்பட்ட பேதங்கள் ஆவி க்குரியவைகள் அல்ல, மாறாக அவை மாம்சத்திற்குரிய மனு~ முறைமை கள். “நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளை யச்செய்தார். அப்படியிருக்க, நடுகிற வனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச் சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளைய ச்செய்கிற தேவனாலே எல்லாமாகும். மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவ னவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான். கிறி ஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறைய ப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று தேவ ஊழியராகிய பவுல் கொரிந்து பட்டணத்திலுள்ள விசுவாசி ளுக்கு தேவ ஞானத்தைப் போதித்தார். அதாவது பரிசுத்த பவுல் என்று இன்று அழைக்கப்படும் இவர், தன்னை சேர்ந்திருப்பதாலோ அல்லது வேறறெந்த பரிசுத்தவான்களை சேர்ந்திருப்பதாலோ பிரயோஜனம் இல்லை ஆனால் கிறிஸ்துவை சார்ந்திருப்பதே தேவையானது என்று வலியுறுத்திக் கூறுகின்றார். பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்ட நாங்கள், கிறிஸ்துவுக்குள் வெற்றி வாழ்க்கை வாழ்ந்த முன்னோர்களை பின்பற்றி செல்லும்படி அவர்களுடைய வாழ்க்கை எங்களுக்கு நற்சாட் சியாக முன்வைக்கப்பட்டிருக்கின்து. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் என்ன செய்தார்கள் என்பதை அறிந்து அதையே நாங்களும் செய்ய வேண் டும். அவர்கள் யாவரும், எஜமானனாகிய இயேசு கிறிஸ்துவைப் பின்ப ற்றினார்கள். கிறிஸ்துவுக்குள் தேவ சித்தத்தை நிறைவேற்றி முடித்தா ர்கள். எனவே, நாங்கள் இந்த உலகத்தைவிட்டு கடந்து சென்ற பரிசுத்தவான்களையோ, உயிரோடிருக்கும் நற்சாட்சிகளையோ சார்ந்து வாழாமல், எப்போதும் கிறிஸ்துவை சார்ந்தவர்களாக வாழவேண்டும்.

ஜெபம்:

பரிசுத்தவான்களாகும்படிக்கு அழைத்த தேவனே, கிறிஸ்துவுக் குள் வெற்றி வாழ்க்கை வாழ்ந்த பரிசுத்தவான்களைப் போல நாங்களும் கிறிஸ்துவை சார்ந்து வாழ பிரசாமுள்ள மனக் கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோத்தேயு 2:5