புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 23, 2020)

இரக்கத்தை காண்பிக்கும் கர்த்தர்

சங்கீதம் 103:10

அவர் நம்முடைய பாவ ங்களுக்குத்தக்கதாக நம க்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங் களுக்குத் தக்கதாக நம க்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.


“ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள்; ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன். ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது. தரித்திரனுக்கோ தான் வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத்தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக்கொண்டு, அவனு க்கு ஒரு மகளைப்போல இருந்தது. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போ க்கன் ஒருவன் வந்தான்; அவன் தன் னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனுஷனுக்குச் சமையல் பண்ணுவித்தான்.” அந்த ஐசுவரியவானை குறித்து உங்கள் நியாயம் என்ன? சற்று சிந்தித்துப் பாருங்கள். இதற்தொத்த அநியாயமான செயலை, தாவீது ராஜா, தன்னுடைய படை சேவகனாகிய உரியாவிற்கு செய்திருந்தான். அந்த அநியாயத்தை தாவீதுக்கு உணர்த்தும்படி, தீர்க்கதரிசியாகிய நாத்தானை கர்த்தர் தாவீதினிடத்தில் அனுப்பியிருந்தார். அந்த அநியாயத்தை செய்தவன் தான் என்பதை தாவீது ராஜா உணர்ந்த போது “நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்;.” என்று மனம் வருந்தினான். ஆம் பிரியமானவர்களே, மற்றவர்கள் எங்களுக்கு செய்யும் நம்பிக்கைத் துரோகம் மன வேதனையானது போல நாங்கள் மற்றவர்களுக்கு செய்யும் நம்பிக்கை துரோகங்களும் மற்றவர்களுக்கு மன வேதனையைக் கொடுக்கும். சில வேளைகளில் நாங்கள் செய்யும் அநியாயங்களை நாங்கள் பெரிதாய் பொருட்படுத்துவதில்லை அல்லது பல வருடங்களுக்கு முன் நாங்கள் எங்கள் தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள், சக விசுவா சிகள் மற்றும் அயலவர்களுக்கு செய்த குற்றத்தை அவர்கள்; மன்னித் திருக்கலாம். அதுபோலவே, எங்களுக்கு துரோகம் செய்தவர்களை நாங்கள் மன்னிக்க பழகிக் கொள்ள வேண்டும். உயர்வான நேரத்திலும், தாழ்வான நேரத்திலும் எங்கள் வாழ்க்கையை நாங்கள் ஆராய்ந்து பார்த்து தேவனை கிட்டிச் சேர்கின்ற பிள்ளைகளாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

அன்புள்ள பரலோக பிதாவே, என் குற்றங்களுக்கு தக்கதான தண்டனையைத் தராமல், என்மேல் உம்முடைய கிருபையைக் காண்பித்தீர் என்ற நன்றி உணர்வு எப்போதும் என் உள்ளத்தில் இருப்பதாக. இர ட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:14