புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 16, 2020)

“ஞானமுள்ள பிள்ளைகள்”

எபேசியர் 5:15

ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து,


இறுதித் தவணை ஆரம்பித்து ஒரு சில கிழமைகளில், வகுப்பிலே நடத்தப்பட்ட இடைக்கால பரீட்சையில் மிகவும் குறைந்த புள்ளிகளை பெற்றுக் கொண்ட மாணவனின் நிலைமையைக் குறித்து அவனுடைய பெற்றோரோடு கலந்துரையாடினார்கள். மாலையிலே, தங்கள் மகனை அழைத்து அவனுடன் பேசினார்கள். இறுதித் தவணைப் பரீட்சைக்கு இன்னும் சில மாதங்கள் உண்டு. ஆசிரி யர்கள் அப்படித்தான் கூறுவார்கள். அது ஒரு சாதாரண பரீட்சை. நான் கடைசி நேரத்தில் படித்து எப்படியாவது பரீட் சையில் சித்தி பெறுவேன் என்று தன் பெற்றோருக்கு பதிலளித்தான். மகனே, அப்படியாக நீ நினைத்த பிரகாரமாக நடந்தால் நல்லது. நீ சுகமாய் இருக் கின்ற ஆரம்ப நாட்களில் கிடைக்கும் அருமையான சந்தர்ப்பத்தை, வீணான அலுவல்களில் விரயமாக்குகின்றாய். படிப்புக்கள் அதிகரிக்கும் போது நிலைமை எப்படியாக மாறி விடும் என்று தெரியாது. அந்த ஆசிரியர் உன்னைப் போல பல ஆயி ரக்கணக்கான மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த அனுபமுள்ளவர். காரணமில்லாமல் அவர் இப்படியான அறிவுரை எங்களுக்கு கூற மாட்டார். எனவே ஆலோசனைகளை அசட்டையாக எண்ணாமல், உன் மனநிலையை மாற்றிக் கொண்டு படிக்க ஆரம்பி என்று வலியு றுத்திக் கூறினார்கள். அந்த மாணவனைப் போலவே இன்று பலர் தேவ னுடைய மேன்மையான அழைப்பைப் பெற்றிருந்தும், தங்கள் நாட்களை வீணான அலுவல்களிலே விரயப்படுத்துகின்றார்கள். “இயேசுவோடு சிலுவையிலே அறையப்பட்டு மனந்திரும்பிய குற்றவாளியைப் போல நான் கடைசி நேரத்தில் மனந்திருப்புவேன்” என்று சிலர் சாட்டுப் போக்குச் சொல்லிக் கொள்வார்கள். அதன் தார்ப்பரியமானது, என்னுடைய வாழ்க்கை முறை பிழை என்று எனக்குத் தெரியும் ஆனால் நான் அப் படியாகத்தான் வாழப் போகின்றேன், கடைசி நேரத்தில் மனதிரும்பி விடுவேன். இப்படியான மனநிலையானது துணிகரமான வாழ்விற்குரியது. ஒரு வேளை இயேசுவோடு சிலுவையிலே அறையப்பட்ட மனந்திரும்பாத மற்றய குற்றவாளியைப் போல வாழ்வு பரிதாபத்திற்குரியதாக முடிந்து போகலாம். எனவே நாட்கள் பொல்லாதவைகளாதனால் ஞான மற்றவர்களைப் போல நடக்காமல், ஞானமுள்ளவர்களாய் நடந்து நாட் களை பிரயோஜனப்படுத்திக் கொள்வோம்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, நீர் எனக்குத் தந்திருக்கும் கிருபையின் நாட்களை விரயப்படுத்தாமல், உமக்குப் பிரியமான பிள்ளைக ளைப்போல வாழும்படிக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - 1 தெச 5:1-6