புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 10, 2020)

எதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்

1 தீமோத்தேயு 6:12

விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்


தேவ ஆவியினாலே வழிநடத்தப்படுகின்றவர்கள் மாம்சத்திற்கேற்றபடி மேன்மைபாராட்டாமல், தங்கள் வாழ்வில் தேவ பெலனாக இருக்கும் இயேசுவின் சிலுவையைக் குறித்தே மேன்மைபாராட்டுவார்கள். அவ ர்களுடைய நற்சாட்சியான வாழ்க்கை முறைகளையே நாங்கள் உற்று நோக்கிப் பார்க்க வேண்டும். அவர்கள் யாவரும் இயேசுவின் அடிச் சுவடுகளை பின்பற்றி சென்றார்கள். அவ்வண்ணமாக சென்ற தேவ ஊழியராகிய பவுல் என்பவரின் வாழ் க்கையை ஆராய்ந்து பாருங்கள். அவர் தேவனிடமிருந்து பெற்ற பர லோகத்தின் இரகசியங்களை எங்க ளுக்கு வெளிப்படுத்தியிருக்கின்றார். தனக்கிருந்த உலக அறிவு, அந்தஸ்து, மத வைராக்கியம் யாவற்றையும் துற ந்து, கர்த்தராகிய இயேசுவை அறியும் அறிவின் மேன்மைக்காக தன் உயி ரையும் தியாகம் செய்ய ஆயத்தமாக இருந்தார். விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை போராடு, பந்தையப் பொருளை நோக்கி ஓடு, நித்திய ஜீவனுக்கென்று அழைக்கப்பட்டாய், மனரம்யமாயிருக்க கற்றுக் கொள் என்று எங்கள் அழைப்பின் நோக்க த்தைக் குறித்து திரும்பத் திரும்ப அவர் வலியுறுத்திக் கூறியிருக்கின்றார். தேவனுடைய அநாதி தீர்மானத்தைக் கெடுக்கும் எல்லாத் தீமை களுக்கும் வேரான பொருளாசையை (பண ஆசையை) குறித்து எச்ச ரிக்கையாக இருக்கும்படி திட்டமாக எடுத்துரைத்துள்ளார். இன்றைய உலகிலே, ஆங்காங்கே மனிதர்கள் உலகத்தினால் உண்டாகும் செழி ப்பையே தேவனுடைய ஆசீர்வாதத்தை அளவிடும் அளவுகோலாக பய ன்படுத்துகின்றார்கள். பணத்தின் ஆசைதான் தீமை, பணம் தீமை அல்ல, தங்களுக்கு பண ஆசை இல்லை என்று கூறி சொத்துக்களை தங்களு க்கும், தங்களுக்கு பின்வரும் சந்ததிக்கும் சேகரித்து வைக்கின் றார்கள். பிரியமானவர்களே, தேவனுடைய வார்த்தை அவமாகிப் போய்விடு மோ? ஒருபோதும் அவமாகிக் போவதில்லை. ஐசுவரியவான்களாக விரு ம்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனு~ரைக் கேட் டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற, மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளி லும் விழுகிறார்கள். மனிதன் எதை தனக்கென்று சேகரிக்கின்றானோ, அவன் அதையே பன்மடங்காக அறுவடை செய்வான். எனவே, நித்திய ஜீவனுக்கென்று கிரியையைகளை நடப்பியுங்கள். அதையே நாடித் தேடுங்கள். பெரிதான பலனை அறுவடை செய்யுங்கள்.

ஜெபம்:

வழிநடத்தும் வல்ல தேவனே, தேவ ஆவியினாலே வழிநடத்த ப்பட்டு ஜீவ ஓட்டத்தை முடித்துக் கொண்டவர்கள் போல நானும் ஜீவ ஓட்டத்தை ஓடி முடிக்க என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 1:10