புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 08, 2020)

இயேசுவிலிருந்த சிந்தை

பிலிப்பியர் 2:5

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது


ஒரு மனிதன் வாரந்தோறும் இரண்டுதரம் உபவாசித்து வந்தான். தன் சம் பாத்தியங்களிளெல்லாம் தசமபாகம் செலுத்தி வந்தான். ஆலயத்திற்கு சென்று ஜெபம் பண்ணுவது அவனுடைய வழக்கமாக இருந்தது. களவு, அநியாயம், விபசாரம் போன்ற பாவங்கள் அவனிடத்தில் இருக்கவில் லை. அந்த மனிதன் செய்து வந்த நற்கிரியைகளை சிந்தித்துப் பாருங் கள். இப்படியாக நெறிமுறையுள்ள வாழ்க்கை முறையை எங்கள் வாழ் வில் கடைப்பிடிப்பதென்றால் எவ்வ ளவு பிரயாசமும் ஒழுக்கமும் தேவை என்பதை எண்ணிப் பாருங்கள். இது ஒரு இலகுவான காரியம் அல்ல. இவ் வளவு அதிகமாக பிரயாசப்பட்ட அந்த மனிதனுடைய உள்ளத்திலே பெருமை குடி கொண்டிருந்திருந்தது. தன் கிரி யைகளினால் தன்னை ஒரு நீதிமான் என்று அவன் நம்பினான். அது மட்டுமல்லாமல், ஆலயத்திற்கு வந்த ஒரு தாழ்மையுள்ள பாவியான மனுஷனை அற்பமாக தன் உள்ளத்திலே எண்ணிக் கொண்டான். (லூக்க 18:9) மாம்சத்திற்கேற்றபடி தன்னையே தான் மெச்சிக் கொண்டான். மீட்பராகிய இயேசுதாமே மனித குலத்தின் பாவங்களுக்காக பல பாடுகளை சகித்து, தம்முடைய திரு இரத்தத்தை சிந்தி, தம்மைத் தாம் எங்களுக்காக பலியாக ஒப்புக்கொடுத்தார். அதன் வழியாக என்னையும் உங்களையும் நீதிமானாக்கினார். இந்த உலகிலே மெய்யான தேவனை அறியாத பலர் அதிகதிகமாக உபவாசித்து பிராத் திக்கின்றார்கள், குடி, வெறி, களியாட்டமின்றி ஒழுக்கமாகவே வாழ்கின்றார்கள்;, அவர்கள் செய்யும் தானதர்மங்களுக்கு அளவு இல்லை. தங் கள் தங்கள் ஆராதனை ஸ்தலத்திற்கு ஒழுங்காக சென்று வருகின்றா ர்கள் அப்படிச் செய்வதனால் ஒருவரும் நீதிமானாக முடியாது என்பத ற்காகவே இயேசு, மனிதகுலத்தை மீட்கும்படிக்கு வந்தார். நாங்கள் செய்யும் நற்கிரியைகள் யாவும் கிறிஸ்துவுக்குள்ளாகச் செய்யப்பட வேண்டும். அவருக்கு இருந்த சிந்தையில்லாமல் அவைகளை செய் வோம் என்றால், அது தேவனுக்கு சுகந்த வாசனையாக இருக்க முடி யாது. கிறிஸ்துவினிடத்திலிருந்த சிந்தை என்ன? அவர் தேவனுடைய ரூப மாயிருந்தும், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெ டுத்து, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப் படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். அவர் தனக்கானவைகளை யல்ல, பிறருக்கானவைகளையே நோக்கினார். அவரைப் போல தாழ் மையான சிந்தையுடையவர்களாக நற்கிரியைகளை செய்யுங்கள்.

ஜெபம்:

தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கும் தேவனே, உம்மு டைய தயவுள்ள சித்தத்தின்படி, கிறிஸ்துக்குள் உம்முடைய விருப்பத்தையும் செய்கையையும் செய்யும்படி என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 127:1-2