புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 05, 2020)

நற்சாட்சி பெற்ற முன்னோர்கள்

எபிரெயர் 12:1

ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க,


ஒரு கிராமத்திலே வாழ்ந்த வாலிபன், தேச மட்டத்திலே நடாத்தப்படும், உயர்தர கணிதப் பரீட்சையிலே தேச மட்டத்திலே அதிக புள்ளிகளைப் பெற்று, அதி விசேட சித்தியை பெற்றுக் கொண்டான். இதனால் அவனுடைய பெயர் பிரசித்தமாயிற்று. “அவன் எனக்கு உறவினன்” “சிறு வயதிலிந்து நாங்கள் கூட்டாளிகள்” “நானும் அவனுடைய அயலவன்” என்று அந்த வாலிப னுக்கு தாங்கள் அறிமுகமானவர்கள் என்றும் கூறுவதற்கு ஜனங்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டா ர்கள். அந்த அயலிலே வசித்து வந்த குறிப்பிட்ட மனி தர் ஒருவர், அந்த வாலிபனை அணுகி, “தம்பி, நீயும் எங்களைப் போல இந்த கிராமத்திலே சாதாரண குடியானவன், அப்படியிருந்தும் எப்படியாக நீ இந்த நிலையை அடைந்தாய், என்பதைப் பற்றி சற்று என் மகனுக்கும் சொல் லிக் கொடுப்பாயா, அதற்குரிய மாதாந்த கட்டணத்தை நான் உனக்கு கொடுப்பேன் என்று வருந்திக் கேட்டுக் கொண்டார்.” இந்த சம்பவத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள். நான் அந்த வாலிபனுக்கு அறிமுகமான வன் என்று சொல்லிக் கொள்வது உண்மையாக இருக்கலாம். ஒரு வேளை அப்படிக் கூறிக் கொண்டவர்கள் சில சலுகைகளை குறிப்பிட்ட காலத்திற்கு பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அப்படி கூறிக் கொள்வ தனால் அவன் குடும்பத்தாரோ, உறவினரோ, நண்பர்களோ அல்லது அயலவர்களோ கணித பாடத்திலே சிறந்து விளங்கப் போவதில்லை. அந்த வாலிபன் அந்த நிலையை அடைவதற்கு என்ன செய்தான் என் பதை அறிந்து, அதன்படி பிரயாசப்பட்டால், மற்றவர்களும் அவனைப் போல சித்தியடையலாம். பிரியமானவர்களே, மேகம் போன்ற திரளான சாட்சிகள் எங்களுக்கு உண்டு. அத்துடன் எங்கள் மத்தியிலும் தியாக மாக பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்த பல பரிசுத்துவான்கள் இப்பூவுலகத் தைவிட்டு கடந்து சென்றிருக்கின்றார்கள். அவர்களுடைய வாழ்க்கை முறையை கவனித்துப் பாருங்கள். எப்படியாக விசுவாசத்திலே நிலைத் திருந்து தங்கள் அழைப்பைக் காத்துக் கொண்டார்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். அவர்களைப் போல தேவனுடைய வார்த்தையை நாம் பற்றிக் கொண்டு, பாரமான யாவற்றையும் தள்ளிவிட்டு, நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்கு கிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற நம் இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம

ஜெபம்:

வழிடத்தும் தேவனே, நித்திய வாழ்வைக் கொடுக்கும் வழிதனி லே வாழ்ந்து வெற்றி பெற்ற முன்னோர்களின் வாழ்க்கையை கவனித்து அவர்களைப் போல உம்மை பின்பற்றிவர கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:33-38