புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 30, 2020)

எங்களை நேசிக்கும் தேவன்

சங்கீதம் 121:3-4

உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார். இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.


ஒரு சிறு பையன், தன் பெற்றோரின் அறிவுரையைக் கேளாமல் பாட சாலையிலே தொடர்ச்சியாக குறும்புத்தனமான காரியங்களைச் செய்து வந்தான். ஒரு நாள், பாடசாலையின் அதிபர் பெற்றோரை அழைத்து அந்த சிறு பையனுடைய நடத்தையை குறித்துப் பேசினார். பாடசாலை யின் சட்டப்படி அவனுக்குரிய தண் டனை வழங்கப்பட்டது. இதனால் பெற் றோர் அவனைக் குறித்து திருப்த்தி யற்றவர்களாக இருந்தார்கள். அடுத்த சில நாட்களுக்குள், நுளம்புகளால் ஏற்படும் காய்ச்சலொன்றினால் அந்த பையன் பீடிக்கப்பட்டான். அவனது தாயானவள், தன் பிள்ளையை கண் ணும் கருத்துமாக கவனித்து வந்தாள். பொழுதுபட்டு இரவானதும், வைத்திய சாலை யிலுள்ள தாதிமார், தாயாரை சற்று நேரம் ஓய்வு எடுக்கும்படி வீடு செ ன்று வரும்படியும், தாங்கள் அவளுடைய பிள்ளையை பார்த்துக் கொள்வோம் என்றும் கூறினார்கள். அவர்களுக்கு நன்றி கூறிய தாயார், அவ னுடைய காய்ச்சல் தணியும் அறிகுறிகள் உண்டாகும் வரைக்கும் அவ்விடம்விட்டுப் போகாமல், இரவு முழுவதும் குறித்த நேர இடை வெளியில் தன் மகனுடைய உடல் வெப்பநிலையை சோதித்து, தன் னால் இயன்ற முதலுதவிகளை செய்து, ஜெபித்துக் கொண்டு இருந் தாள். இது தாயானவளுடைய அன்பு. தேவனுடைய வார்த்தையை பல முறை கேட்டும், அதை அசட்டை பண்ணி, தங்கள் பொல்லாத வழிக ளினால் தேவனைவிட்டு தூரமாய்ப்; போன அவருடைய ஜனங்கள் அந் நிய ஜனங்களால் வெகுவாய் ஒடுக்கப்பட்டார்கள். அவர்களுடைய அழு குரல் தேவ சமுகத்திற்கு எட்டியது. அவர்களுடைய சிறுமையை கண்டார். கர்த்தர் எங்களை கைவிட்டார், ஆண்டவர் எங்களை மறந்தார் என்று ஜனங்கள் எண்ணினார்கள். ஆனால் கர்த்தர் தம்முடைய ஜனங்களை நோக்கி: ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்ப தில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; என்று கூறினார். எப்போதும் கர்த்தரை நோக்கிப் பாருங்கள். “கர்த்தர் உரு க்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோப ங்கொண் டிரார்.” எனவே உயர் வானாலும் தாழ்வானாலும் தேவனை சார்ந்து வாழுங்கள்.

ஜெபம்:

மனதுருகும் தேவனே, எங்கள் மீறுதல்களினிமித்தம் எங்களை தள்ளிப்போடாதபடிக்கு உம்முடைய கிருபையினாலே எங்களை காத்து, நாங்கள் உணர்வடையும்படி எங்களை வழிநடத்திச் செல்வதற்காக நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 103:1-9