புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 22, 2020)

கிறிஸ்துவின் சாயல்

ரோமர் 8:29

தம்முடைய குமாரன் அ நேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக் கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தா ரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலு க்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;


ஒரு உலகப் பிரசித்திபெற்ற மனிதனுடைய வாழ்க்கையை சித்தரிக்கும் மேடை நாடகம் ஒன்றை தாயரிப்பதற்கு பெரிய ஸ்தாபனம் ஒன்று அனு மதியைப் பெற்றுக் கொண்டது. குறிப்பிடப்பட்ட ஸ்தாபனத்தினர்கள் பிர சித்தி பெற்ற மனிதனுடைய பாத்திரத்தை தெரிந்தெடுப்பதில் அதிக கவ னத்தை செலுத்தினார்கள். அந்த கதாபாத்திரத்திற்கு தெரிந்ததெடு க்கப்பட்ட நடிகர், உலக பிரசித்திபெற்ற மனிதனை குறித்த சுயசரிதைகளை மிக வும் ஊக்கமாக வாசித்தான். அவர் எங் கே பிறந்தார், எந்த கலாச்சாரத்திலே வளர்க்கப்பட்டார், எப்படியான ஆடைக ளை உடுத்தினார், எப்படிப்பட்ட உணவு வகைகளை உண்டார், இப்படியாக அவருடைய நடை உடை பாவனையை உன்னிப்பாக கவனித்து, அவரைப் போலவே தான் மாற வேண்டும் என்று தான் உண்ணும் உணவுகளில் கூட கவ னம் செலுத்தினான். ஏன் அப்படியாக செய்தான்? அதனால் அவனுக்கு வரும் இலாபம் என்ன? அவன் தன்னுடைய பெயருக்கு புகழ் தேடுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. அதுமட்டுமல்ல இதனால் அவனுக்கு ஊதியமாக ரொ க்கப் பணமும் கொடுக்கப்படும். பாருங்கள், இந்த உலகத்தோடு அழி ந்து போகும் பேருக்கும் புகழுக்கும் எவ்வளவாக மனிதர்கள் விடா முயற்ச்சியாக உழைக்கின்றார்கள். அழியாத ராஜ்யத்திற்காக அழைக் கப்பட்டிருக்கும் நாங்களோ நித்தியராகிய இயேசுவைப் போல நாளு க்கு நாள் அவருடைய சாயலுக்கு ஒப்பாக மாறுவதற்கு முன்குறிக்கப்ப ட்டிருக்கின்றோம். இது உலக பொருளுக்கும் புகழுக்குமுரிய நடிப்பு அல்ல. இது ஈடு இணையில்லாத நித்திய மகிமைக்குரியது. முதலாவ தாக, இந்த அழைப்பின் மேன்மையை அறிந்து கொள்ளும்படி பிரகாச முள்ள மனக்கண்களை உடையவர்களாக இருக்க வேண்டும். அந்த அழை ப்பு எங்கள் பொக்கி~மாக மாற வேண்டும். கர்த்தராகிய இயேசு எப் படிப்பட்டவர் என்பதை அறியும் அறிவில் பெருக வேண்டும். அதன் பொரு ட்டு கர்த்தருடைய வேதத்தை கருத்தோடு தினமும் வாசிக்க வேண்டும். அவைகளை எப்போதும் எங்கள் இருதயத்தின் பொக்கி~மாக்கிக் கொள்ள வேண்டும். கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தை தியானித்து, அதன்படிக்கு எங்கள் வாழ் க்கை முறைமைகளை நாளுக்கு நாள் மாற்றியமைக்க வேண்டும்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, நித்தியராகிய இயேசுவின் சாயலிலே நாள்தோறும் வளர்ந்து பெருகும்படி அவரைப் போல மாறும் நித்திய வாழ்வின் மேன்மையை உணர்ந்து கொள்ளும் இருதயத்தை தந்தருள்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 3:18