புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 20, 2020)

கிறிஸ்துவை அறியும் அறிவின் மேன்மை

பிலிப்பியர் 3:11

அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.


ஒரு சனசமுக நிலையத்திலே பல வருடங்களாக ஒற்றுமையாக சேவையாற்றி வந்த இரு உறுப்பினர்களுக்கிடையிலே, ஒரு குறிப்பிட்ட விடயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர்களுக்கிடையிலிருந்த நட்பில் விரிசல் ஏற்பட்டது. நாளடைவிலே, அந்த விரிசல் இருவருக்கி டையில்; வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. ஆரம்பத்திலே இருவரும் குறிப்பிட்ட விடயத்தைக் குறித்த தங் கள் அபிப்பிராயத்தை ஆணித்தரமாக ஒருவருக்கொருவர் வலியுறுத்தி வந்தா ர்கள். பேச்சுவார்த்தைகள் தடம்புரண்டு சென்று கொண்டிருந்த போது, அவர்க ளில் ஒருவர் தன்னுடைய கருத்தை உறுதிப்படுத்த முடியாது போன போது, “நான் யார் என்று தெரியாமல் துணி வாய் பேசுகின்றாயா?” என்று மற்றவ ரிடம் கூறினார். பாருங்கள், இவ்வளவு காலமும், சக உறுப்பினர்களாக, ஒருமைப்பாட்டுடன் சேவை செய்தவர்கள், தீடீரென தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் தகமைகளை பேச ஆரம்பித்து விட்டார்கள். உலகத்தி லே இத்ததைய பேச்சுகளுக்கு இடமுண்டு. ஆனால் இத்தகைய பேச்சு க்கள் தேவனைச் சார்ந்து வாழ்பவர்களுக்கு தகாதது. தேவ சேவையை அர்ப்பணிப்போடு செய்து வந்த பவுல் அடிகளார், கிறிஸ்துவின் சேவை க்காக தன்னை அர்ப்பணித்த பின்பும், தன்னுடைய கல்வி, சமுக அந்த ஸ்து, கோத்திரம், மத வைராக்கியம், குடியுரிமை, மற்றும் தன் குற்ற மற்ற வாழ்வைப் பற்றிப் பேசினார். தன் முன்னைய வாழ்வின் தகை மைகளுக்கு ஒரு தலைப்பைக்; கொடுத்தார். ஆனாலும் கிறிஸ்துவை அறியும் மேன்மைக்காக அவைகளை குப்பையும் நஷ்டமும் என்று தள்ளிவிட்டார். சற்று எங்கள் வாழ்க்கையை சிந்தித்துப் பார்ப்போம். எங் களுடைய தகைமைகள் என்ன? எங்கள் பிள்ளைகளுடைய தகைமைகள் என்ன? தேவ பிள்ளைகள் முன்னிலையில் நாங்கள் அறிக்கையிடும் எங் கள் வாழ்வின் தகுதிகள் என்ன? தேவ பிள்ளைகள் இல்லாத இடங்க ளிலே நாங்கள் அறிக்கையிடும் தகுதிகள் என்ன? எங்கள் மத்தியில் ஏற்படும் கருத்து முரண்பாடுகளின் வேளையிலே, சிலுவையைப் பற்றிய மேன் மையா? அல்லது இந்த உலகத்தினால் உண்டான மேன்மையா? எவை எங்கள் சிந்தையை ஆட்கொள்கின்றது? நாய் தான் கக்கினதைத் தின் னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்ற பிரகாரம் நாங்கள் எங்கள் சுய மேன்மைகளுக்கு திரும்பாமல், அவை களை குப்பையும் ந~;டமும் என்று தள்ளிவிடுவோம்.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வு வாழும்படி அழைத்த தேவனே, உம்முடைய அன்பை மறந்து, என் கிரியைகளை நான் மேன்மைப் படுத்தாதபடிக்கும், நீர் எனக்குள் இருப்பதே என் தகுதி என்று வாழ உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 10:4-5