புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 17, 2020)

கனமான அழைப்பு

எபிரெயர் 5:4

மேலும், ஆரோனைப் போல தேவனால் அழைக்க ப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.


நான் இசையை முறைப்படி கற்று அத்துறையிலே பாண்டித்தியம் பெற் றவன். முன்னைய வாழ்நாட்களிலே உலக பிரசித்தி பெற்ற ஸ்தாபன ங்களினால் வெளியிடப்பட்ட பல பாடல்களுக்கு இசையமைத்தேன் என்று, துதி ஆராதனைக் குழுவிற்கு இயக்குனராக இருப்பதற்குரிய தன் தகுதிகளை ஒரு மனிதன் கூறிக் கொண்டான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள முன்பு எங்களுக்கு இருந்த இந்த உலகத்தின் தகுதிகள் தேவனுடைய கனமான ஊழியத்தை செய்தவற்குரிய சான்றிதழ்களாக மாற முடியாது. நான் என் தகுதிகளை கூறி, நான் என்னை எப்படியும் அழைத்துக் கொள்ளலாம் ஆனால் தேவன் ஒரு மனி தனை தம்முடைய கனமான ஊழியத் திற்கு ஏற்படுத்தினால் மட்டுமே அவன் தேவனுடைய அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வான். தேவன் ஒரு மனிதனை அழைத்தாலொழிய அவன் தேவனை அறிய வேண்டிய பிரகாரம் அறிய முடியாது. தேவனுடைய ஆசாரிப்பு ஸ்தலத்தின் (தெய்வீக கூடாரத்தை) வேலைகளை செய்வதற்கு தகுதி பெற்றவர்கள் யார்? மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: பாரு ங்கள், கர்த்தர் யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து, அவன் விசித்தி ரமான வேலைகளை யோசித்துச் செய்யவும், பொன்னிலும் வெள்ளி யிலும் வெண்கலத்திலும் வேலைசெய்யவும், இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கவும், மரத்தில் சித்திர வேலை செய்து சகல விநோ தமான வேலைகளைச் செய்யவும், அவனுக்கு ஞானத்தையும் புத்தி யையும் அறிவையும் அருளி, அவன் சகலவித வேலைகளையும் செய்யும்படி தேவ ஆவியினாலே அவனை நிரப்பினார். அவன் இருத யத்திலும், தாண்கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியா பின் இருதயத்திலும், போதிக்கும் வரத்தையும் அருளினார். எனவே தேவன் உங்களை அழைத்து, பாவமறக்கழுவி, இரட்சிப்பின் வஸ்திர த்தை தந்து, தூய வாழ்வு வாழும்படி வேறு பிரித்திருந்தால், உங்கள் முன்னைய நாட்களுக்குரிய மேன்மைபாரட்டுதலை விட்டுவிடுங்கள். ஒருவேளை முன்னைய வாழ்நாட்களிலே எங்களுக்கு இருந்த தகுதிகள் தேவனுடைய ஊழியத்திற்கு ஒத்தாசையாக இருக்கலாம், அப்படியா னால் அந்த ஏற்பாடு தேவன் எங்களுக்கு கொடுக்கப்பட்ட சிலாக்கியம்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, எனக்கிருக்கும் உலக தகுதிகளினால் உம் மை பிரியப்படுத்த முயலாமல், என்னை தாழ்த்தி என்னிடம் உள்ளதை முழு மனதோடு உம்மிடத்தில் அர்ப்பணிக்கின்றேன். என்னை ஏற்றுக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாத் 35:30-34