புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 01, 2020)

இது புது யுகம்

சங்கீதம் 90:2

பர்வதங்கள் தோன்றுமு ன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவா க்குமுன்னும், நீரே அநா தியாய் என்றென்றைக் கும் தேவனாயிருக்கிறீர்.


தன் பேரப்பிள்ளையின் போக்கை கண்டு மனம் வருந்திய பாட்டனார், “,ந்த உலகம் மாறிப்போய்விட்டது” என்று தனக்குள்ளே மனவருத்தப் பட்டார். ,ந்த பூமியானது பல யுகங்களை (ages, period of time) கடந்து வந்திருக்கின்றது. எடுத்துக்காட்டாக ,ன்ரநெற் என்றால் என்ன என்று அறி யாத உலகம் சில தசாப்த்தங்களுக்கு முன்பு இருந்தது, அது அன்றைய உலகம். ஆனால் ,ன்றைய உலகிலே அது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. ,ப்படியாகவே, எங்களுக்கு முன் ,ரு ந்த சந்ததி வாழ்ந்த உலகமும்;, அந்த சந்ததிக்கு முன்னிருந்த சந்ததி வாழ்ந்த உலகமும் வேறுபட்டிருந்தது. பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது. அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்தி பாரப்படுத்தி, அதை நதிகளுக்குமே லாக ஸ்தாபித்தார். (சங் 24:1-2). அவர் ஆதியிலே உருவாக்கிய உலகம் நல்லது. ஆனால் மனிதன் தன்னை பொல்லாங்கனுடைய வஞ்சகத்திற்கு ஒப்புக் கொடுத்தபடியால், பூமியா னது சிருஷ்டிக்கப்பட்ட நாளிலிருந்து ,ன்று வரைக்கும் அதன் உலக போக்குகள் மாறிக் கொண்டே போகின்றது. அந்தந்த காலப் பகுதிக ளிலே (யுகத்திலே) வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை முறை அந்தந்த காலகட்டத்திற்குரிய உலக போக்கை நிர்ணெயிக்கின்றது. உலகம் முழு வதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந் திருக்கிறோம். (1 யோவான் 5:19) பூமியும் அதன் குடிகளும் கர்த்தருடையதாக ,ருந்தும், அதன் குடிகள் உலகத்தின் போக்குகளுக்கு தங்களை ஒப்புக் கொடுப்ப தால், பூமியனாது அதன் குடிகளினாலே தீட்டுப்படுகி ன்றது. காலங்கள் மாறிப்போகலாம், உலகத்தின் போக்குகளின்படி சூழ்நிலைகள் மாறிப் போகலாம் ஆனால் உலகமும் பூமியும் தோன்றுமுன் அநாதியாய் என் றென்றைக்கும் ,ருக்கின்ற தேவனானவர் மாறாதவராயிருக்கின்றார். ,ந்த தேவன், தலை முறை தலைமுறையாக எமக்கு அடைக்கலமான வர். அப்படியான தேவனை கொண்ட ஜனம் பாக்கிய முள்ளது. எனவே தற்போதைய உலகத்தில் வாழ்கின்ற நாம், அந்த உலகத்தின் போக்குக ளுக்கு உடன்பட்டவர்கள் அல்லர். தேவன்தாமே நாங்கள் கெட்டுப்போ காமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு எங்களை தமக்கென்று வேறு பிரித்திருக்கின்றார். எனவே ,ந்த உலகத்துக்கு ஒத்த வே~ம் தரிக் காமல் மேன்மையான அழைப்பிற்கு பாத்திரராக நடந்து கொள்வோம்.

ஜெபம்:

சதா காலங்களிலும் ஆளுகை செய்யும் தேவனே, நான் உம்முடைய வழிகளைவிட்டு விலகி இந்த உலகத்தின் போக்குகளுக்கு உடன்படாமல் உம்மையே பற்றிக் கொண்டு வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:1-2