புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 20, 2020)

அறிவும், அந்தஸ்தும், சௌந்தரியமும்

தானியேல் 2:11

ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது; மாம்சமாயிருக்கிறவர்களோடே வாசம்பண்ணாத தேவர்களேயொழிய ராஜ சமுகத்தில் அதை அறிவி க்கத்தக்கவர் ஒருவரும் இல்லை என்றார்கள்.


பாபிலோனின் ராஜா, எருசலேமைக் கைப்பற்றிய போது, இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசு இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறி னவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜா வின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலி பரை கொண்டுவரவும், அவர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும் பாi~யை யும் கற்றுக்கொடுக்கவும் ராஜா கட் டளை கொடுத்தான். அவர்களுக்குள் தானியேல், அனனியா, மீ~hவேல், அசரியா என்பவர்களும் உள்ளடங்கு வார்கள். பாபிலோனிலே இப்படியாக தேர்ச்சிபெற்ற அநேகர் இருந்தார்கள். ஒரு நாள், ராஜாவாகிய நேபுகாத்நேச் சார் சொப்பனங்களைக் கண்டான்; அதி னால், அவனுடைய ஆவி கலங்கி, அவ னுடைய நித்திரை கலைந்தது. அப் பொழுது ராஜா, நாட்டிலுள்ள தேர்ச்சி பெற்ற யாவரையும் அழைத்து. தான் அவர்களை நோக்கி: என்னிடத்திலிருந்து பிறக்கிற தீர்மானம் என்ன வென்றால், நீங்கள் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்கு அறிவியாமற்போனால் துண்டித்துப்போடப்படுவீர்கள்; உங்கள் வீடுகள் எருக்களங்களாக்கப்படும் என்றான். ராஜ சாமுகத்தில் சேவை புரிகின் றவர்கள், தோற்றத்தில் அழகானவர்கள், ராஜ குலத்தவர்கள், அறிவில் சிறந்தவர்கள் ஆனால் அவர்களில் எவருக்குமே, இந்த உலகத்தினால் உண்டான தகுதிகளினால் சொற்பனத்தை தெரிவிக்க முடியவில்லை. தானியேல், ராஜாவினிடத்தில்போய், சொப்பனத்தின் அர்த்தத்தை ராஜா வுக்குக் காண் பிக்கும்படித் தனக்குத் தவணை கொடுக்க விண்ணப்பம் பண்ணினான். தானியேலும் மேற்கூறிய உலக தகுதிகளையுடைய வாலி பனாக இருந்தான். அந்த தகுதிகள் எதுவும் அவனுக்கு உதவவில்லை. அவன் தேவனை நோக்கிப் பார்த்தான். உன்னதத்திலுள்ள தேவன் தம் முடைய இரகசியங்களை தானியேலுக்கு வெளிப்படுத்தினார். பிரியமான வர்களே, தேவ இரகசியங்களை அறிந்து கொள்வதற்கு உலக அறிவும், சமுதாய அந்தஸ்தும், சௌந்தரியமும் அவசியமானதல்ல. தேவனுக்குப் பயந்து அவருடைய வழிகளில் நடக்கின்ற மனிதனுக்கு அவர் தமது இரகசியங்களை வெளிப்படுத்துவார்.

ஜெபம்:

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் தேவனே, இந்த உலக தகுதிகளினாலே இழுப்புண்டு போகாதபடிக்கு, உமக்கு பயந்து உமது வழிகளிலே நடக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கி றேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஆதியாகமம் 18:17-18