புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 15, 2020)

“விசுவாச அறிக்கை”

பிலிப்பியர் 3:14

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொ ருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகி றேன்.


சுமார் 2000 வருடங்களுக்கு முன்னதாக இந்த உலகத்திலே, தன்னு டைய மதத்தைக் குறித்து மிகவும் வைராக்கியமுடைய மனிதனொ ருவன் வாழ்ந்து வந்தார். இவர், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாகிய இஸ்ரவேல் வம்சத்தார். அந்த வம்சத்தில் பென்யமீன் என்னும் கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவர், அந்நாட்களிலே கொடுக்கப்பட்டி ருந்த சட்டதிட்டங்களின் படி குற்றம் சாட் டப்படாதவர். ஜனங்களால் அறியப்ப ட்டிருந்த பரிசேயர் என்ற ஒரு விசேஷித்த குழுவைச் சேர்ந்தவர். குமா லியேலின் என்னும் பிரபல்யமான மனி தனிடத்திலே திட்டமாக கற்றுக் கொண் டவர். அந்நாட்களிலே உலகத்தின் பெரும்பகுதியை ஆண்ட ரோம ராஜ்ய த்தின், பெற்றுக் கொள்வதற்கு அரிதான, பிரஜா உரிமையை உடைய வர். இந்நாட்களுக்குரிய வாழ்க்கைத் தரத்தோடு ஒப்பிட்டு பார்த்தால்: ஜாதி, மத, கல்வி, அந்தஸ்து என்பவைகளில் பிறப்பாலோ அல்லது வளர்ப்பாலோ குறைவற்றவர். ஆனால், தேவ அழைப்பை பெற்ற போது, மேற்கூறிய தன்னுடைய தகுதிகள் வரும் இலாபம் அற்பமானது என்றும் அவைகள் மாம்சத்திற்குரியவைகள் என்றும் நன்கு உணர்ந்து கொண் டார். அதாவது, மாம்சத்திற்குரியவைகளினால் எங்கள் எண்ணத்திலிருக் கும் உலக ஆசையை மட்டுமே நிறைவேற்ற முடியும். அவைகள் யாவும் இந்த பூமியோடு ஒழிந்து போகும் என்றும் அவைகளினாலே பிதாவாகிய தேவனையும், அவர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ் துவையும் அறிய முடியாது என்றும் திட்டமாக அறிந்து கொண்டார். எனவே, கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன் மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக் கொண்டார். முன்பு மாம்சத்தில் வாழ்ந்த நாட்களிலே கிறிஸ்துவை சார்ந்தவர்களை வெகு வாய் துன்பப்படுத்தி வந்தார். ஆனால் இப்போது அவர் கிறிஸ்துவை சார்ந்து வாழ்வதினால், பல பாடுகளையும், துன்பங்களையும், வறுமை யையும், நிந்தைகளையும் சந்தித்தார். அவை யாவற்றிலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் என்று “விசுவாச அறிக்கையிட்டார்”. இந்த உலகத்தின் மேன்மையை இழந்து பரலோக நித்திய மேன்மையை அடைந்து கொண்டார். (2 தீமோ 4:6-8).

ஜெபம்:

இந்த உலகத்தின் மேன்மையை அடைய வேண்டும் என்று பிர யாசப்படாமல், அழியாத நித்திய மேன்மையை சுதந்தரித்துக் கொள்ளு ம்படி விசுவாசத்தை காத்துக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - ரோமர் 8:34-39