புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 12, 2020)

இன்ப துன்ப வேளைகளில்...

சங்கீதம் 84:6

அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ளுகிறார்கள்;.


மனிதர்களுடைய வாழ்க்கையிலே ஏற்படும் இன்னல்களானது அவர்களு டைய உண்மையான சுயரூபத்தை வெளிக்காட்டும் என்ற முதுமொழி உண்டு. அதாவது, தாழ்வின் பாதையிலே வாழ்க்கைப் படகு செல்லும் வேளையிலே உறவுகளின் பிணைப்பு பரீட்சை பார்க்கப்படும். சில சந் தர்ப்பங்களிலே, பெற்றோர் பிள்ளைகள், கணவன் மனைவி, சகோதர சகோதரிகள், நண்பர்களுக்கிடையி லான உறவுகள் உடைந்து போய்விடு கின்றது. விசுவாசத் துரோகம் தலை தூக்கிவிடுகின்றது. முன்னொரு கால த்திலே, ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர் கொண்ட ஒரு மனு~ன் இருந்தான். அவனுக்கு ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் பிறந்தார்கள். திரளான ஐசுவரியம் அவனுக்கிருந் தது. அதினால் அவன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனா யிருந்தான். அந்த மனு~ன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். அவனுடைய வாழ்விலே விசுவாசத்தின் சோதனை ஏற்பட்டது. அவனுக்கிருந்த சொத் துக்கள், செல்வம் எல்லாம் அழிந்து போயிற்று. அனுடைய பிள்ளைகள் யாவரும் இறந்து போனார்கள். வேலையாட்கள் கொலையுண்டு போனா ர்கள். யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் சாத்தானானவன் அவனை வாதித்தான். இந்த வேளையிலே அவன் மனைவியோ, தன் வாயினாலே தேவனுக்கு விரோதமான காரியங்களை பேசி, தேவனக்கு எதிரான விசுவாசத் துரோகம் செய்தாள். யோபுவை தேற்ற வந்த நண்பர்களும் அவனை குற்றம் சாட்டினார்கள். ஆனால் யோபுவோ, மிகுந்த இன்னல் வேளை யிலும் தன் வாயின் வார்த்தைகளை தேவனுக்கு விரோதமாக எழுப் பாமல், என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். தன் துன்ப வேளையிலும் நண்பர்களுக்காக தேவனை வேண்டிக் கொண்டான். இப்படியாக அவன் தன் விசுவாசத்தை கிரியையிலே காண்பித்தான். பெரிதான மீட்பைப் பெற்றான். யோபுவைப் போல, உயர்விலும், தாழ் விலும்;, துன்பவேளைகளில் நாங்களும் எங்கள் விசுவாசத்தை கிரியை களினாலே காண்பித்து, அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை களிப்பான நீரூற்றாக்கிக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

கிருபை நிறைந்த தேவனே, என் துன்ப வேளைகளிலும் நான் உமக்கெதிராக வார்த்தைகளை பேசாதபடிக்கு விசுவாசத்தின் வார்த்தை களை அறிக்கை செய்ய என்னை பெலப்படுத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோபு 19:25-27