புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 01, 2020)

பொல்லாங்கனின் தந்திரங்கள்

1 தெச 5:22

பொல்லாங்காய்த் தோன்கிற எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள்.


குடியிருப்புப் பகுதியிலே (Residentil Area) தன் வாகனத்தை அதி வேக மாக ஓட்டிச் சென்ற மனிதனொருவன், தன் வாகனத்திற்கு முன்பாகச் செல்லும் மற்றய வாகனங்களையும் தாண்டிச் செல்லும்படிக்காக அங் குமிங்குமாக தனது வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்வதை, தன் மகனோடு பாடசாலை பரிசளிப்பு விழாவிற்கு சென்று கொண்டிருந்த தந்தையொருவர் அவதானித்தார். அவர் தன் வாகனத்தை தெரு ஓரத்திலே நிறு த்திவிட்டு, தாறு மாறாக தன் வாக னத்தை ஒட்டிச் செல்லும் மனிதன், கட ந்து செல்லும்படி இடங் கொடுத்தார். அதை கவனித்த மகன் தன் தந்தையை நோக்கி: அப்பா, சாலை விதியின்படி நீங்கள் தானே முன்பாக செல்ல வேண் டும், பொலிசாரிடம் அகப்பட்டால் அந்த மனிதன் தானே பிரச்சனையில் மாட்டிக் கொள்வான். ஏன் நீங்கள் ஒதுங்கி, அவனுக்கு இடங் கொடுக்க வேண்டும் என்று கேட்டான். அதற்கு தந்தையானவர்: மகனே, அந்த மனிதனுக்கு சாலை விதிகள் ஒரு பொருட்டல்ல. பிரச்சனையை தேடிச் செல்லும் மனிதனைப் போல அவன் அங்கலாய்க்கின்றான். அவன் என் வாகனத்தோடு மோதினால், அவன் மேல்தான் குற்றம் என்பது உண்மை. ஆனால் நீயும் நானும் விபத்தில் சிக்கிக் கொண்ட பின், யார் சரி? யார் பிழை? என்பதில் அதிக பலன் இல்லை. விபத்துண்டானால்: எங்கள் காலமும், சுகமும், பணமும் விரையமாகும் அல்லவோ. நாங்கள் முக்கியமான நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருக்கின்றோம் எனவே நாங்கள் சூழ்நிலைகளை நிதானித்து செல்ல வேண்டும் என்று பதிலளி த்தார். ஆம் பிரியமானவர்களே, இந்த உலகம் பொல் லாங்கனுக்குள் கிடக்கின்றது (1 யோவான் 5:19). நாங்களோ, பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை செய்யும்படி வேறு பிரிக்கப்பட்டிருக்கின்றோம். சட்டத்தையும், ஒழுங்கையும் குறித்து பொல்லாங்கனுடன் பேசுவதில் என்ன இலாபம்? உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங் கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும். மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயி ருக்கும்;. கருப்பொருளாவது, வாழ்க்கையில் வரும் இடையூறுகளை இன ங்கண்டு அவைகளை தவிர்த்துக் கொள்ளும்படிக்கு நாங்கள் எப் பொழுதும் விழிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும். பொல்லாங்காய் தோன்றுகின்ற காரியங்களை விட்டு விலகி நலமானவைகளை பிடித்துக் கொள்வோம்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, பொல்லாங்கனின் தந்திரங்களை இனங்கண்டு, அவைகளினாலே என் நாட்களை வீணடிக்காதபடிக்கு பிரகாசமுள்ள மனக் கண்களைத் தந்து நடத்துவீராக இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 2:11