புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 26, 2020)

இரக்கமுள்ள மனம்

நீதிமொழிகள் 19:17

ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.


விதை விதைக்கின்றவர்களே அதன் பலனை அறுவடை செய்து கொள்கின்றார்கள்;. விதைகளை களஞ்சியத்தில் சேர்த்து வைக்கின்ற வர்கள் விளைச்சலின் பலனை ஒரு போதும் கண்டடையப் போவதி ல்லை. ஏழைகளுக்கு இரங்க மனதில்லாமல், தனக்கென்றும், தன் சந் ததிக்கென்றும் ஐசுவரியத்தை சேர்த்து வைக்கின்றவனின் ஆசை இந்த உலகத்தை பற்றிக் கொள்வதால், தேவ சமாதானத்திற்கு அந்நியனாக மாறிவி டுகின்றான். வெறுமையாக இருக்கும் ஒரு ஏழையின் உணவுத் தட்டில் ஒரு அப்பத்தை வைக்க மனதுள்ளவன் யார்? தங்கள் சரீரத்தை மறைத்துக் கொள்ள தகுந்த ஆடையற்றவர்களுக்கு உதவ முன் வருபவன் யார்? மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்க இடமில்லாதவர்களு க்கு வசிப்பிடங்களை அமைத்துக் கொடு க்க மனதுள்ளவன் யார்? பாடசாலைக்கு சென்று அடிப்படைக் கல்வியை கற்பதற்குரிய தேவைகளை சந்திக்க மனதுடையவன் யார்? இப்படியாக நாளாந்த தேவைகளை சந்திக்க முடியாமல் தவிக்கும் திக்கற்ற பிள்ளைகள், விதவைகள் மத்தியிலே சிறிய விதைகளை (உதவிகளை) மனதார விதைத்து மகிழ்பவன், “விதைப்பும் அறுப்பும்” என்ற இரகசியத்தின் மேன்மையை அறிந்திருக்கின்றான். இந்த பூமி யிலே வாழும் நாட்களிலே அவன் தன்னிலுள்ள வெளிச்சத்தை மற்றவர்கள் வாழ்க்கையிலே வீசச் செய்கின்றான். பரலோக சமாதானத்தை தன் உள்ளத்திலே பெற்றுக் கொள்கின்றான். இந்த உலக அளவு கோலின்படி அவன் ஐசுவரியவான் என்ற பெயரை சூடாவிட்டாலும், கர்த்தரை தன் சந்ததிக்கு தாபரமாக்கிக் கொள்கின்றான். பரலோகிலே தனக்கு பொக்கிஷங்களை சேர்த்துக் கொள்கின்றான். “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத் ததை அவர் திரும்பக் கொடுப்பார்.” கர்த்தருடைய கைமாறு ஆசீர் வாதமுள்ளது. அந்த ஆசீர்வாதத்தில் மகிழ்ச்சி உண்டாயிருக்கும். எனவே, பொருளாலும், சரீர பிரயாசத்தினாலும், ஏழை எளியவருக்கு தாராள மனதுடன் உதவி செய்யுங்கள். உங்களிடத்திலுள்ளவைகளி லிருந்து எடுத்துக் கொடுங்கள். அவை தற்காலத்திலே அற்பமானவை களாக தோன்றினாலும், வருங்காலங்களிலே பெரிதான விளைச்சலை உங்கள் வாழ்விலும் மற்றவர்களுடைய வாழ்விலும் உண்டு பண்ணும்.

ஜெபம்:

அன்புள்ள தேவனே, என் இருயத்தைக் கடினப்படுத்தி என் ஆத்துமாவை கெடுத்துக் கொள்ளாமல், இன்று உம்முடைய சத்தத்திற்கு நான் செவி கொடுத்து மனந்திரும்ப என்னை உணர்வுள்ளவனா(ளா) க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 58:7