புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 05, 2020)

எதிர்காலத்தைக் குறித்த பயங்கள்

மத்தேயு 6:34

ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.


பாடசாலையின் விடுமுறையின் நாட்கள் இன்னும் ஒரு வாரத்தில் முடிந்து விடும். சின்ன மகன் இரண்டாம் வகுப்பிற்கு செல்லப் போகின்றான். பாடசாலைக்குரிய புதிய சீருடையையோ, காலணியையோ வாங்குவற்கு நிர்வாகம் போதாது. மற்றய மாணவர்கள் மத்தியில் என்னுடைய மகன் வெட்கப்படப் போகின்றான் என்பது ஒரு தாயா ருடைய ஏக்கமாக இருந்தது. இப்படி யாக மனிதர்கள் இனி நடக்கவிருக்கும் காரியங்களை அதிகமாக சிந்தித்து கல க்கமடைவது சகஜம். “நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத் தினம் தன்னுடையவைகளுக்காகக் கவ லைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்” என்று மீட்பராகிய இயேசு கூறியிருக்கின்றார். ஏனெனில் எங்களுடைய தேவை என்னவென்று பரம பிதா அறிந்திருக்கின்றார். இயேசு தாமே இதை கூறியதுடன் மட்டும் நின்றுவிடாமல், தாம் கூறிய தேவ வாக்கின்படி வாழ்ந்து காட்டினார். இயேசுவின் பூலோக திருப்பணி நிறைவேறும் நாள் நெருங்கிய போது, இன்னும் சில நாட்களிலே, எருசலேமிலே, நிந்தையையும், அவமான த்தையும், பாடுகளையும் தான் சந்திக்க வேண்டும் என்று அறிந்திரு ந்தும், எந்த தயக்கமும் இன்றி எருசலேமிற்கு வருகை தந்தார். அந்த நாளை குருத்தோலை ஞாயிறு என்று நினைவு கூருகின்றோம். ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல் லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்;. ஆத்துமாவையும் சரீர த்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். என்று கூறிய இயேசு பரம பிதாவின் சித்தமில்லாமல் தனக்கு ஒன்றும் நேரி டாது என்று உறுதியான நம்பிகையுடையவராக தம்மை முற்றிலுமாய் பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்தார். அதை நிறைவேற்றி முடிக்க வேண்டிய பெலனை பிதாவானர் இயேசுவுக்கு அருளினார் (லூக் கா 22:43). எனவே கர்த்தராகிய இயேசு எங்களுக்காய் பட்ட பாடுகளை அதிகமாக தியானிக்கின்ற இந்த நாட்க ளிலே, பாடுகளின் தியானத்தின் கருப்பொருளைப் பற்றிக் கொள்ள வேண்டும். எங்கள் எதிர்காலத்தை சந்திக்க, பிதாவின் சித்தத்தை நிறை வேற்றி முடிக்க வேண்டிய பெலனை தேவன் எங்களுக்கு தருவார் என்ற நம்பி க்கையில் நாங்கள் உறுதியாய் நிலைத்திருக்க வேண்டும்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, எதிர்காலத்தை குறித்து கலக்க மடையாமல், உம்முடைய திருச்சித்தத்தை இந்த பூமியிலே நிறைவேற்றி முடிக்க என்னை பெலப்படுத்தி வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 12:12-17