புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 04, 2020)

பிள்ளைகளின் எதிர்காலம்

சங்கீதம் 128:4

இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்ப டுவான்.


“என்னுடைய வாழ்வு முடிந்து விட்டது, நான் வாழ்வதெல்லாம் என்னுடைய பிள்ளைகளுக்காக” என்று பெற்றோர் சொல்வதை நாங்கள் கேட்டிருக்கின்றோம். இப்படிப்பட்ட கூற்றுக்கள், சில பெற்றோரின் உள்ளத்தில் பிள்ளைகளைக் குறித்து இருக்கும் கரிசனையை வெளிப்படுத்துகின்றது. வேறு சிலரின் வாழ்க்கையிலே இத்தகைய வார்த்தைகள் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பின்னடைவுகளினாலும் மன தில் ஏற்பட்ட வடுக்களினாலும்; உண் டாகின்றது. இதற்கொத்தபடி, என்னு டைய பிள்ளைகள் ஆலயத்திற்கு சென்று நல்வாழ்க்கை வாழ்வதே என் னுடைய ஏக்கம் என்று சிலர் சொல் லிக் கொள்வார்கள். அது நன்மையான ஏக்கம். அதை எப்படி இந்த உலகிலே, எங்கள் வாழ்க்கையிலே நடைமுறைப் படுத்துவது? கடந்த காலத்திலே அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகளினாலோ அல்லது இயேசுவை அறியாத நாட்களிலே வாழ் க்கையிலே ஏற்பட்ட துன்பங்களினாலோ கடந்த காலத்திலே பல ஏமா ற்றங்களை நாம் சந்திக்க நேர்ந்திருக்கலாம். நான் உனக்கு இன்று சமாதானம் தருவேன் என்று இயேசு கூறுகின்றார். எங்களுடைய பிள்ளைகளின் வாழ்வின் எதிர்காலம் செழிப்படையும்படிக்கு, நாங்கள் தேவனுக்கு பயந்து அவர் வழிகளில் நடக்க வேண்டும். பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை இந்த பூமியிலே நிறைவேற்றும்படிக்காய் நாங்கள் வாழ்கின்றோம் என்ற உண்மையை உணர்ந்தவர்களாக நாம் வாழும்படி பெற்றோர்களாகிய நாங்கள், முதலாவது எம் வாழ்வை முழுமையாக இயேசுவினிடத்திலே ஒப்படைக்க வேண்டும். வனாந்தரத் திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்கு கின்ற தேவன் என்றென்றும் ஜீவிக்கின்றார். (ஏசாயா 43:19). நம்பி க்கை இழந்து போன வாழ்வை வளமாக மாற்றுகின்ற தேவன் பாசத்தோடு அழைக்கின்றார். கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக் கின்றவன் எவனோ, அவன் பாக்கியவான். உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக் கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். இதோ, கர்த்த ருக்குப் பயப்படுகிற மனுஷனும் அவனுடைய சந்ததியும் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

ஜெபம்:

ஆசீர்வதிக்கும் தேவனே, கடந்த கால சாவல்களினால் இருதயம் சோர்ந்து போகாதபடிக்கு, உம்முடைய திருச் சித்தம் என்னுடைய வாழ் வில் நிறைவேறும்படிக்காய் என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 4:7-10