புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 23, 2020)

என்றும் மாறாத நம்பிக்கை

உபாகமம் 1:31

ஒரு மனிதன் தன் பிள் ளையைச் சுமந்துகொ ண்டு போவதுபோல, நீங் கள் இவ்விடத்திற்கு வரு கிறவரைக்கும், நடந்து வந்த வழிகள் எல்லாவ ற்றிலும், உங்கள் தேவ னாகிய கர்த்தர் உங்க ளைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே.


ஒரு காரியத்தைக் குறித்து அறிவில்லாத நாட்களிலும், எங்கள் நிலை யை புரிந்து கொண்டு எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல் லாதிருந்த காலங்களிலும், நாங்கள் அறியாததும் எட்டாதமுமான வழி களிலே கர்த்தர் எங்களை வழிநடத்தி வந்தார். மனதிலே காரிருள் சூழ் ந்த வேளைகளிலே, மனக் கண்கள் பிரகாசமற்றிருந்தது. எங்கள் சொந்த வழிகளிலே சென்று ஆத்து மாவை கெடுத்துக் கொள்ளாதபடிக்கு அவர் “குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரி யாத பாதைகளில் அவர்களை அழைத் துக்கொண்டு வந்து, அவர்களுக்கு முன் பாக இருளை வெளிச்சமும், கோண லைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப் பேன்.” என்று கூறிய தேவன் இதுவ ரைக்கும் ஆச்சரியமான வழியிலே நட த்தி வந்திருக்கின்றார். ஆனால் இன் றைய நாட்களிலே ஏற்பட்டிருக்கும் சூழ் நிலை மிகவும் கடிமானதாக இருக்கின் றதே. இதற்கு நான் தீர்வைக் காண வேண்டும். என்று மறு படியும் தங்கள் சொந்த முயற்சிகளுக்கு சில மனிதர்கள் திரும்புகின்றார்கள். தாயின் கருவில் தெரிந்து கொண்ட தேவன், உன் சிறுவயதில் உன்னை காத் துவந்தார். இளவயதில் உன் பக்கமாக நின்றார். முதிர்வயது முடியும் வரை அவர் தாங்கி, ஏந்தி வழிநடத்துவார். தம்முடைய ஜனங்களை வனாந்தர வழியாக போ~pத்து வழிநடத்தி வந்த தேவன், தம்மை நோக்கி பார்க்கின்றவர்களை ஒருபோதும் கைவிடுபவர் அல்லர். அவருடைய திருமுகத்தை நோக்கிப் பார்த்த ஒருவரும் வெட்கப்பட்டு போவதில்லை. எனவே இன்று உங்கள் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் அசௌரியங்களை கண்டு சோர்ந்து போய்விடாதிருங்கள். உங்கள் விசுவாச சோதனையின் நேரத்தில், இதுவரைக்கும் தேவன் நடத்தி வந்த வழிகளை திரும்பி பார்த்து அவற்றிற்காக தேவனுக்கு நன் றியை செலுத்துங்கள். விசுவாசத்திலே நிலைத்திருங்கள். அவர் மறு படியும் நீங்கள் அறியாததும் எட்டாததுமான புதிய காரியங்களை உங்கள் வாழ்வில் செய்ய வல்லமையுள்ளவராக இருக்கின்றார்.

ஜெபம்:

நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனே, இனி என் வாழ்விலே நீர் செய்ய இருக்கும் ஆச்சரியமான காரியங்களைக் குறித்து விசுவாசமுள்ளவனா(ளா)க இருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 42:16