புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 17, 2020)

குழப்பமான வேளைகளில் ஆறுதல் உண்டு

பிலிப்பியர் 4:11

நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக் கொண்டேன்.


பல குழப்பங்களில் அகப்பட்டிருந்த இளவயதுடைய மனிதனொரு வன் தன் பாட்டனாரை சந்திக்கும்படி சென்றிருந்தான். தன்னுடைய தற்போதைய நிலைமையை வைத்து தன்னை நியாயந்தீர்க்க மாட்டார் என்ற நம்பிக்கையை அவன் தன் பாட்டனார்மேல் வைத்திருந்ததால். பேரனை கண்ட பாட்டனார், வழக்கம் போலவே அன்போடு அவனை வரவேற்று உபசரித்தார். பல வருடங்களாக தன் பாட்டனாரை சந்தி த்து வந்த அவன், அவருடைய அமை தலான தொனியையும் கிருபை நிறை ந்த வார்த்தைகளையும் குறித்து ஆச்ச ரியப்பட்டான். “பாட்டா, நான் எந்த வேளை உங்களிடம் வந்தாலும், நீங் கள் தளம்பிப் போகாமலே இருக்கின் றீர்களே, நீங்கள் உங்களுடைய இளமை நாட்களிலும் இப்படியாகவா இருந்தீர் கள்” எனக் கேட்டான். இல்லை மகனே, இல்லை! என் வாழ்வை நெறிப்படுத்த எனக்கு ஆதரவாக இருந்தவர்கள் பலர். அவர்கள் தற்போது இந்த பூவில் இல்லை. அவர்கள் தேவனுக்கு பயந்து அவர் வழிகளில் வாழ்ந்த மனிதர்கள். அவர்கள் வழியாக தேவ கிருபை எனக்கு வெளிப்பட்டது. அன்று அவர்களுடைய அறிவுரைகள் சில வேளை களில் கசப்பாக தோன்றினாலும் அவை இப்போது நீ என்னில் காண்கின்ற பலனைத் தருகி ன்றது என்று பாட்டனார் புன்முறுவலோடு பதிலளித்தார். ஆம், சகோதர சகோதரிகளே, இந்த உலகிலே எங்களு க்கு முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள் பலர். இன்னுமாய் இவ்வுல கிலே முன்னோடிகளாக திகழ்கின்றவர்கள் பலர். தேவனுக்கு பயந்து அவர் வழிகளில் வாழ்ந்த அவர்களுடைய முடிவை கவனித்துப் பாரு ங்கள். அதாவது, அவர்களின் முதிர்ச்சியின் நாட்களிலே எப்படியாக வாழ்ந்தார்கள். அந்ந முதிர்ச்சியின் நிலையை அடைவதற்கு என்ன செய்தார்கள். என்பதை கற்றுக் கொண்டு நாளுக்கு நாள் அந்த அறி விலும் அனுபவத்திலும் நாங்கள் வளர்ந்து பெருக வேண்டும். வாழ் வில் வரும் குழப்பங்கள் எங்கள் அருமையான வாழ்நாட்களை விரய மாக்காதபடிக்கு, குழப்பங்களிலே தரித்திருக்காமல், அவை ஒவ் வொன்றின் மத்தியிலும் மனரம்யமாக வாழும்படிக்கு ஞான உபதேசங் களுக்கு செவிகொடுங்கள். தேவ ஆவியானவர் தாமே, தேவனுடைய வார்த்தைகள் வழியாக எங்களை வலுவூட்டுகின்றார். உயர்வானாலும் தாழ்வானாலும், பெலவீமான நேரத்திலும், பெலமுள்ள நாட்களிலும் கர்;த்தருக்குள் சந்தோ~மாக இருக்க கற்றுக் கொள்ளுவோம்.

ஜெபம்:

சகலவித ஆறுதலின் தெய்வமே, நம் முன்னோர்களின் நற்சாட்சியின் வாழ்வை கவனித்து, வெற்றி வாழ்வை வாழும் வழிகளை கற்றுக் கொள்ளும் இருதயத்தைத் தந்து நடத்துவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:11