புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 15, 2020)

சரீர பெலவீனமான நாட்கள்...

சங்கீதம் 146:2

நான் உயிரோடிருக்குமட் டும் கர்த்தரைத் துதிப் பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.


மாலைப் பொழுதிலே, அவ்வப்போது தன் பேரப்பிள்ளைகளோடு தன் னுடைய வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களைக் குறித்து பேரனார் பேசிக் கொள்வது வழக்கம். ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரியான இவர் தன்னுடைய யுத்த கால அனுபவங்களையும், தன் நாட்டிற்காக தான் செய்த தியாகங்களையும் பற்றி அதிகமாக பேசிக் கொள்வார். இன்னு மாய் தேசப்பற்றோடு வாழும் இம்மனி தன் உத்தியோக பூர்வமான சேவை யை சில வருடங்களுக்கு முன் நிறை வேற்றி முடித்தார். அதுபோலவே, கர் த்தருக்காக சேவை செய்பவர்களின் உத்தியோகபூர்வமான திருப்பணி இந்த உலகிலே முடிவடையும் நாள் உண்டு. ஒரு கிறிஸ்தவனாய் வாழ்வது குறிப் பிட்ட காலத்தில் முடிவடைவதில்லை. எங்களுடைய இறுதி மூச்சுவரை கிறிஸ்துவின் சாயலில் ஒவ்வொரு நாளும் நாம் பெருக வேண்டும். நான் வாழ்ந்து முடித்தேன் வயோதிபமாகிவிட்டது இனி நான் என்ன செய்தாலும் பறவாயில்லை என்ற எண்ணம் எங்களில் சற்றும் இருக்க முடியாது. வயோதிப நாட்கள் சவால் நிறைந்த வாழ்க்கைக் காலம். மற்றவர்களிலே தங்கி இருக்க வேண்டிய காலங்கள் உண்டு. உடற் பெலவீனங்களினால் அசௌகரியங்கள் ஏற்படுவதுமுண்டு. ஆண்டுகள் கடந்து செல்லும் போது எங்கள் சரீரம் வயதாகுவது உண்மை. ஆனால் கர்த்தருக்குள் தங்கள் ஆண்டுகளை களிக்கின்றவர்களின் ஆத்துமா ஆண்டுகள் கடந்து செல்லும் போது தேவனுக்குள் இன்னும் அதிகமாக பெலப்படுகின்றது. கர்த்தருக்குள் வாழ்கின்றவர்களின் சரீர பெலன் ஒடுங்கும் போது கர்த்தர் அவர்களை தாங்குகின்றவராயி ருக்கின்றார். “தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன், உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரை வயது மட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந் தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.” என்று கர்த்தர் தம் ஜனங்களுக்கு கூறியிருக்கின்றார். எனவே, உயிரு ள்ள நாளெல்லாம் அவருடைய மகத்துவங்களையும், அவர் எங்கள் ஆத்துமாவுக்கு செய்த நன்மைகளையும் நினைத்துத் துதியுங்கள். அன்பின் தேவனைப் பாடிக் கீர்த்தனம் பண்ணுங்கள்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, இந்த பூவுலக வாழ்வை முடித்து, உம்முடைய நித்திய மகிமைக்குள் பிரவேசிக்கும் நாளிகை வரைக்கும் நீர் என்னைத் தாங்கி உம்முடைய வழியில் நடத்திச் செல்வீராக .இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - ஏசாயா 46:3-4