புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 14, 2020)

உத்தம மார்க்கத்தாரின் வாழ்வு

சங்கீதம் 119:1

கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.


ஒரு தங்கும் விடுதி ஒன்றிலே தலைமை சமயல்காரனாக வேலைக்கு அமர்த்தப்பட்ட மனிதன் சமையல் கலையை முறைப்படி கற்று பட்டம் பெற்றிருந்தான். அதை உறுதிப்படுத்தும்படிக்கு அவனிடம் கல்லூரி யால் வழங்கப்பட்ட சான்றிதழும் இருந்தது. தான் செய்யும் வேலை யில் அனுபவமிக்க அந்த மனிதன், சக ஊழியர்களுடன் சாந்தமாக நடந்து கொள்வான். எனினும் அவன் வேலைக்கமர்த்தப்பட்டு ஒரு சில நாட் களுக்குள்ளே, உணவின் சுவையை யும் தரத்தையும் குறித்து பல வாடிக் கையாளர்கள் முறையீடு செய்திருந் தார்கள். அதனால் சீக்கிரமாய் அவன் தன் வேலையை இழந்து போனான். ஒரு மனிதனுடைய வேலைத் திற மையை எதனால் நிர்ணெயிக்கின்றார்கள்? அவனுடைய பட்டபடிப்பின் சான்றிதழை பார்ப்பதினாலா? அவன் எத்தனை வருடங்கள் வேலை அனுபவமுள்ளவன் என்பதாலா? அவனுடைய கடந்த கால சமையலைக் குறித்த நற்சாட்சியினாலா? அல்லது தற்போது சமைக்கும் சுவையான உணப் பண்டங்களினாலா? பிரியமானவர்களே, ஒரு காரியத்தைக் குறித்த அறிவு நல்லது. வாழ்க்கையின் அனுபவமும்; நல்லது. கடந்த காலங்களைக் குறித்த நற்சாட்சிகளும் நல்லது. ஆனால் இப்போது என் வாழ்க்கையில் என்ன நடக்கின்றது என்பதை மேலே குறி ப்பிடப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து சிந்தித்துப் பாருங்கள். வேதத்தை குறித்த அறிவு நல்லது. கடந்த கால அனுபவங்களும் நற் சாட்சிகளும் நல்லது ஆனால் இப்போது என் வாழ்வில்; நான் கொடுக்கும் கனிகள் என்ன? ஒவ்வொரு மரமும் அதன் கனிகளால் அறியப்படும். நாங்கள் கர்த்தருடைய வேதத்தின் படி நடந்தோம் என்று கடந்த காலத்தில் வாழ்பவர்கள் அல்லர். மாறாக, நாங்கள் கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கின்றவர்களாக நிகழ்காலத்திலே வாழ வேண்டும். தன் கடந்த வருட பரீட்சையிலே கணக்கு பாடத்திற்கு அதி விசே~ட சித்தி பெற்ற பிள்ளை, இந்த ஆண்டிலே மிகக் குறைந்த புள்ளிகளை பெற்றால், உங்களில் எந்தப் பெற்றோர் அதை நல்லது என்று ஏற்றுக் கொள்வீர்கள்? எந்தப் பெற்றோரும் அதை விரும்ப மாட்டார்கள். நாங்கள் ஒவ்வொரு நாளையும் ஜெய ங்கொள்ளுகின்றவர்களாய் வாழும்படிக்கு, கர்த்தருடைய வேதத்தை நன்றாகக் கற்று, கடந்த கால அனுபவங்களால் பெலப்பட்டு, நற்சாட்சி பெற்றவகளாய் முன்னேறிச் செல்வோம்.

ஜெபம்:

அன்பின் பரலோக பிதாவே, உம்முடைய வார்த்தைகளை நன்றாக கற்று, கடந்த காலத்தின் அனுபவங்களோடு, இன்றைய நாளிலே உம்முடைய வார்த்தையின்படி வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோபு 27:3