புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 11, 2020)

நாட்களை பிரயோஜனப் படுத்துவோம்

எபேசியர் 5:17

ஆகையால், நீங்கள் மதி யற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து கொள்ளுங்கள்.


புது வருடப் பிறப்பு மற்றும் பிறந்த தினம் போன்றவை எங்கள் வாழ்க்கையின் முக்கிய மைல் கற்களாக இருக்கின்றது. அந்த நாட் களை சிலர் விசே~pக்கலாம் வேறு சிலரோ அதை வாழ்க்கையில் இன்னுமொரு நாள் என்று கருதிக் கொள்ளலாம். இப்படிப்பட்ட நாட் களை அவரவர் தங்கள் சொந்த வாழ்க்கையில் கணக்குப் பார்ப்பதற் குரிய நன்மையான நாட்களாக மாற்றிக் கொள்ளலாம். அதாவது, இவ்வளவு ஆண்டுகள் கடந்துவிட்டது நான் என்னத்தை சாதித்தேன் என்று துக் கிப்பதில் பலனில்லை. கடந்துபோன ஆண்டை பிரயோஜனப் படுத்தாமல் நாட்களை விரயப்படுத்தினேன் என்று மனச்சோர்வு அடைந்தால் இந்த ஆண் டும் விரயமாகப் போய்விடும். இந்த உலக போக்கின்படி சிந்திக்கின்ற மனி தர்கள், “ஆண்டுகள் விரைவாக ஓடுகி ன்றதே, வயோதிப நாட்களை அடைய முன்பு உலகத்தை அனுபவிக்க வேண்டும் என்று இந்த உலக வாழ்க்கையின் தராதரத்தின் அளவுகோலின்படி தங்கள் நாட்களை களியாட்டங்களாக மாற்றிக் கொள்கின்றார்கள். ஆனால் வேதம் கூறும் அறிவுரை என்ன? “நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப் பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்.” என்று பரிசுத்த வேதாகமத்தில் வாசிக்கின்றோம். “எந்த இலக்கை நோக்கி நான் ஓடுகின்றேன் என்ற எண்ணம் எங்கள் ஒவ் வொருவரிலும்” காணப்பட வேண்டும். ஒருவரும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைவதே மனிதர்களைக் குறித்ததான பிதாவாகிய தேவனுடைய பிரதான திட்டமாக இருக்கின்றது. அந்த இலக்கை நோக்கி நாங்கள் முன்னேறிச் செல்ல வேண்டும். எனவே ஆண்டுகள் கடந்து செல்லும் போது, இப்படிப்பட்ட தெய்வீக ஞானத்திற்குரிய சிந்தை எங்களில் பெருக வேண்டும். நாங்கள் இனி வரும் நாட்களை துன்மார்க்கத்திற்குரிய களியாட்டங்களினால் விரயப்படுத்தாமல், தேவ பக்தியுள்ளவர்களாக, பரம அழைப்பின் பந்தயப் பொருளை (நித்திய ஜீவனை) அடையும்படிக்கு, அந்த இலக்கை நோக்கி ஒடும்படியாக, எங்களுடைய வாழ்க்கையில் நன்மையான மாற்றங்கள் உண்டாக வேண்டும்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, பரிசுத்த வாழ்வு வாழும்படிக்காய் நீர் எங்களை வேறு பிரித்திருக்கின்றீர் என்பதை நன்கு உணர்ந்தவர்களாக உம்முடைய சித்தம் செய்யும்படி எங்களுக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - சங்கீதம் 90:10-12