புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 28, 2020)

தேவனுக்கு உகந்த தானதர்மங்கள்

எபேசியர் 4:31

சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.


குறிப்பாக கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூரும் நாட்களிலே, அநே கர்; ஏழைகள், எளியவர்கள், திக்கற்றவர்கள், அநாதைகளை ஆதரிக் கும்படிக்கு, பலவிதமாக நற்கிரியைகளை செய்கின்றார்கள். வேறு சிலர், தங்கள் சிக்கனமான வாழ்க்கையிலே, பல ஒறுத்தல்கள் தியாக ங்களை செய்து, அவ்வண்ணமாக சேமித்த பணத்தின் வழியாக உத விகளை செய்கின்றார்கள். இவை யாவ ற்றிலும் தேவன் பிரியமாயிருக்கின் றார். எங்கள் அருமை இரட்சகராகிய இயேசுவும் இந்த பூவுலகில் வாழ்;ந்த நாட்களிலே நன்மை செய்கின்றவராய் சுற்றித்திரிந்தார். எனவே இப்படிப்பட்ட நற்கிரியைகளை உற்சாகமுள்ள இருத யத்தோடு நடப்பியுங்கள். அதே வேளை யிலே உங்கள் உடன் சகோதர சகோ தரிகளுடனும், மற்றய விசுவாசிகள் மத்தியிலும் உங்கள் நற்சுபாவங் களை, இந் நாட்களிலே அதிகமாக வளருங்கள். எடுத்துக்காட்டாக, உங்களுக்கு எதிராக குற்றம் செய்தவர்களை மன்னித்து விடுங்கள். ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்;. உங்களைத் துன்ப ப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள், ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள். தானதர்மங்கள் நல்லதுதான். ஆனால் ஒரு மனிதனு டைய மனதிலே கசப்பு, கோபம் மூர்க்கம், தகாதவைகளை பேசுதல் போன்றவைகள் இருதயத்திலே இருக்கும் போது, அவன் அவைக ளைக் குறித்த உணர்வு அற்றவனாக வாழும் போது, அவன் செய்யும் தானதர்மங்கள் தேவனுக்கு உகந்த வாசனையாக இருக்காது. தேவனு டைய அன்பு இருக்கும் இருதயத்தில் கசப்பு, கோபம் மூர்க்கம், தகாதவைகளை பேசுதல்; போன்றவைகளுக்கு இடமில்லை. கசப்பு, வன்மம், பகை, வைராக்கியம் குடி கொண்டிருக்கும் இருதயத்தில் தேவ அன்புக்கு இடமில்லை. “எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.” என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. எனவே முதலாவதாக நாங்கள் கசப்பு, கோபம் மூர்க்கம், தகாதவைகளை பேசுதல் போன்றவற்றிலிருந்து விடுதலையாக வேண்டும் என்ற மனநிலை உடையவர்களாக, இந்நாட்களிலே எங்கள் வாழ்க்கையை தேவனிடத்தில் ஒப்புக் கொடுப்போம்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, முதலாவதாக என்னுடைய இருதயம் உமக்கு உகந்த காணிக்கையாக இருக்கும்படிக்கு மாம்சத்தின் கிரியைகளை விட்டு விடுதலையாகும்படிக்கு என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:1-3