புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 26, 2020)

கிறிஸ்துவின் பாடுகளின் தியானம்

பிலிப்பியர் 2:5

கிறிஸ்து இயேசுவிலிரு ந்த சிந்தையே உங்களி லும் இருக்கக்கடவது;


சமுதாயத்தினால் ஒடுக்கப்பட்டு, பாவ சாபத்தின் அடிமைத்தன கட்டுக்களிலே மாய்ந்து கொண்டிருக்கும் ஜனங்கள், ஒரு மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல அலைந்து திரிவதை கண்ட கருணைத் தெய் வமாகிய கர்த்தராகிய இயேசு, அவர்கள் மேல் மனம் இரங்கி, அவர்கள் பாவங்களை மன்னித்து, அடிமைத்தன கட்டுக்களிலிருந்து அவர்களை விடுவித்து, புது வாழ்வு கொடுத்தார். சர்வவல்லமையுள்ளவரா கிய இயேசு கிறிஸ்து, தம்மை எதிர்ப் பவர்களை அழித்துப் போடாமல், அவ ர்கள் அறியாமையை மன்னித்து, அவ ர்கள் மனந்திரும்பும்படி அவர்கள் மேல் நீடிய பொறுமையுள்ளவராக இருந் தார். அன்று மட்டுமல்ல இன்றுவரை க்கும் தம் மன உருக்கத்தையும் நீடிய பொறுமையையும் மனித குலத்திற்கு அனுக்கிரகம் செய்து வருகின்றார். நன்மை செய்யும்படி, தம்மைத் தாழ்த்தி, இவ்வுலகிற்கு வந்த இயேசுவுக்கோ: மதத் தலை வர்கள், அதிகாரிகள், பெருந் தொகையான ஜனங்கள் தீமை செய்தா ர்கள். தம்மை: அடித்தவர்கள், காயப்படுத்தியவர்கள், சிலுவையிலே அறைந்தவர்கள், அவமதித்தவர்கள், நகைத்தவர்கள் நிந்தையான பேச்சுக்களை பேசியவர்கள் யாவரின் பாவத்திற்காகவும் மன்னிப்பு வழங்கும்படியாக பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய் கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்று வேண்டிக் கொண் டார். இப்படிப்பட்ட சுபாவமுடையவர்களாக நாம் மாற வேண்டும் என்ற மனநிலையுடனே, இந்நாட்களிலே கிறிஸ்துவின் பாடுகளை தியா னம் செய்ய வேண்டும். “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங் களிலும் இருக்கக்கடவது. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவ னுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணா மல், தம்மைத்தாமே வெறு மையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணப ரியந்தம், அதாவது சிலுவை யின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவ ராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.” ஆதலால் பிரியமானவர்களே, எங் களுக்கு ஏற்படும் எதிரிடையான சூழ்நிலைகளில் கிறிஸ்துவின் சுபா வங்கள் எங்களிலே வெளிப்படத்தக்கதாக எங்கள் மனநிலையை சீர்ப டுத்துவோம். எங்களைத் தாழ்த்துவோம். தேவ வசனத்திற்கு கீழ்ப்ப டிவோம்.

ஜெபம்:

அன்புள்ள பரலோக பிதாவே, உம்முடைய திருக்குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சாயலிலே நாள்தோறும் வளர்ந்து பெருகும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 42:2