புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 22, 2020)

ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ளுங்கள்

எபேசியர் 4:3

சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.


ஒரே குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் மத்தியிலே சின்ன வயதிலி ருந்தே கருத்து வேறுபாடுகள், வேற்றுமைகள் இருந்து வருகின்றது. நாங்கள் ஒரு குடும்பத்தார் எனவே எங்கள் ஐக்கியத்தை காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் பிள்ளைகள் வள ரும் போது, வேற்றுமைகளும் வளர்ந்து கொண்டு செல்கின்றது. ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தாலும், கருத்து முரண்பாடுகளால் உண்டாகக் கூடிய பிரி வினைகளை தவிர்த்துக் கொள் ளும்படியாக, “அது அவளுடைய வாழ் க்கை அவள் எப்படியாவது வாழ ட்டும்” “அவன் எக்கேடு கெட்டால் எனக்கு என்ன?” என்று அவரவர் தன் தன் அலுவல்களை பார்க்கும் கலா ச்சாரத்தை மனிதர்கள் தங்களுக்கென உருவாக்கிக் கொள்கின்றார்கள். இப்படிப்பட்ட எண்ணத்தோடு ஒன் றாய் வாழும் குடும்பம் ஏற்கனவே தனக்குள் பிரிந்திருக்கின்றது. இத ற்கு ஒத்த கலாச்சாரத்தையே பல மனிதர்கள் சபை ஐக்கியத்திலே இருக்கும்படியாக விரும்புகின்றார்கள் அல்லது அப்படிப்பட்ட கலா ச்சாரத்தையுடைய சபையில் அங்கத்தவர்களாக இருக்கும்படிக்கு விரு ம்புகின்றார்கள். எங்களுக்கு ஒரே மெய்யான தேவன் இருக்கின்றார். நாங்கள் தாபரிக்கும் ஊராகிய ஒரே பரலோகம் எங்களுக்கு உண்டு. எங்கள் விசுவாசம், மனந்திரும்புதல், பாவ மன்னிப்பு, மனந்திரும்பி எடுக்கும் முழுக்கு ஞானஸ்நானம், தேவ கிருபை, தேவனுடைய பரிசு த்தம் என்பவைகளில் எந்த வேற்றுமையும் இல்லை. கர்த்தராகிய கிறி ஸ்துவின் பிறப்பு, அவருடைய பரித்த வாழ்வு, கிறிஸ்துவின் திரு ப்பணி, அவரின் பாடுகள், சிலுவை மரணம், உயர்த்தெழுதல், பரம் ஏறுதல், பரிசுத்த ஆவியின் அபிN~கம், கிறிஸ்துவின் வருகை, இப்படியாக இவைகளில் எந்த மாறுதலும் இல்லை. கர்;த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகின்ற அறிவின் மேன்மைக்காக இந்த உலக த்தில் மிகுதியானவைகளை நஷ்டமும் குப்பையுமென தள்ளிவிட்டு, கிறிஸ்துவின் சாயலிலே வளர வேண்டும். ஆதலால் பிரியமான வர்களே “நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதா னக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கி ரதையாயிருங்கள்.”

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, ஒன்றான மெய் தேவனாகிய உம்மையும், இயேசு கிறிஸ்துவையும் அறிகின்ற அறிவில் வளர்ந்து பெருகுவதையே என் நோக்கமாகக் கொண்டு வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:1-3