புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 19, 2020)

என் அழைப்பின் நோக்கம் என்ன?

ரோமர் 12:2

நீங்கள் இந்தப் பிரபஞ்சத் திற்கு ஒத்த வேஷந்தரியாமல்,


“நான் வளர்ந்து எப்படியாவது ஒரு தீயணைப்பு படை வீரனாக வரு வேன்” என்று ஒரு மகன் தன் தாயாரிடம்; கூறினான். தாயார் தன் மகனை நோக்கி: “நீ ஏன் ஒரு தீயணைப்பு படைவீரனாக வருவதற்கு ஆசைப்படுகின்றாய்” என்று கேட்டாள். நாட்டிலே அவர்களுக்கு நல்ல மதிப்பு உண்டு, நல்ல சம்பளம் கிடைக்கின்றது என்று ஆய்வுகள் வழி யாக அறிந்து கொண்டேன் என்று கூறி னான். தாயாரோ, “முக்கியமாக நீ மக்க ளுக்கு தியாகத்துடன் சேவை செய்ய வேண்டும் என்ற மனநிலையுடையவ னாக இருக்க வேண்டும்” என்று பதில் கூறினார். ஆம் பிரியமானவர்களே, இந் நாட்களிலே அதிகப்படியான சிறார்கள், நான் வைத்தியராக, ஆசிரியராக, தாதியாக, பொலிசாராக வரவேண் டும் என்ற ஆசையின் அடிப்படை நோக்கம் மாற்றமடைந்து கொண்டே போகின்றது. ஒரு மணித்தியாலத்திற்கு நான் எவ்வளவு உழைக்கலாம், எப்படிப்பட்ட இலகுவான வாழ்க்கை வாழலாம், எத்தனை வயதிலே ஓய்வு எடுக்கலாம், உலகத்தை சுற்றி எங்கெங்கே உல்லாசப் பயண ங்கள் போகலாம், என்பதே பிள்ளைகளின் தீர்மானங்களின் முதன் மைக் காரணிகளாக இருக்கின்றது. எங்களுடைய சுகவாழ்வை குறித்த கரிசனை தவறானது அல்ல ஆனால் சேவை மனப்பான்மை, தியாக மனப்பான்மை, பொது நலன் கருதி வாழும் வாழ்கை மனிதர்கள் மத்தியிலே குறைந்து கொண்டே போகின்றது. கடைசி நாட்களிலே, மனிதர்கள் சுயநலமுடையவர்களாகவும், பணப்பிரியர்களாகவும், நன்றி யறியாதவர்களாயும், சுகபோக பிரியமுடையவர்களாகவும் இருப்பார் கள் என்று தீமோத்தேயு என்னும் இளமையான ஊழியருக்கு அப் போஸ்தலராகிய பவுல் அறிவுரை கூறியிருக் கின்றார். இது இன்றைய உலகம் போகின்ற போக்காக இருக்கின்றது. ஆனால், நாங்களோ அல்லது எங்கள் பிள்ளைகளோ இவைகளுக்கு உடன்பட்டிருக்க வேண் டியதில்லை. முதலாவதாக இந்தப் பூமியிலே தங்கள் வாழ்க்கையின் கருப்பொருளைக் குறித்து பெற்றோரின் மனநிலை மாற்றமடைய வேண்டும். பின்பு, தாமதிக்காமல், தங்கள் நாளாந்த நடைமுறை வாழ்க்கையினாலே, மனித வாழ்வின் முக்கிய அம்சங்களை பிள்ளைக ளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த உலகத்தின் போக்கின்படி, உலக ஆய்வுகளின்படி வாழாமல், தேவனுடைய வார்த்தையின்படி எங்கள் மனம் ஒவ்வொருநாளும் நன்மை யான எண்ணங்களினாலும் செய்கைகளினாலும் நிறைய வேண்டும்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, நாங்கள் வாழ்வடையும்படிக்கு தன் ஜீவனையே தியாகமாக கொடுத்த மீட்பராகிய இயேசுவின் அடிச்சுவடுகளை பின்பற்றும் வாழ்க்கை வாழ என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 22:6