புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 18, 2020)

முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக

1 தெச 5:23

சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றி லும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும் போது குற்றமற்றதாயிரு க்கும்படி காக்கப்படுவதாக.


நவீனமயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த உலகிலே நாகரீகம் என்ற போர்வையில், குடும்ப வாழ்வின் அடிப்படை உண்மைகள் மறு தலிக்கப்பட்டு வருகின்றது. பல நாடுகளிலே, தேவனுடைய கற்ப னைகளுக்கு விரோதமான சட்டங்கள் ஏற்படுத்துவதை செய்திகள் வாயிலாக அறிந்து கொள்கின்றோம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளு க்கு இசைவாக்கப்படுவதை பலர் தேச த்தின் அபிவிருத்தி என்றும் தாங்கள் குறுகிய மனப்பான்மை அற்றவர்கள் என்றும் கூறிக் கொள்கின்றார்கள். பாவ மான செயல்களையும்;, யோக்கியமற்ற நடத்தைகளையும் கூட சர்வ சாதாரண மான செயல் என்றும், கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ப வர்களும் இவற்றை ஏற்றுக் கொள் ளும் காலமாக இருக்கின்றது. நீங்க ளோ, அந்தகார பாவ இருளினின்று ஆச்சரியமாக தேவ ஒளிக்கு அழைக்க ப்பட்டவர்கள். உலகத்திற்கு வெளிச்சம் வீசும் சுடர்களாக ஏற்படுத்தப்பட்டவர் கள். தேவனுடைய ஜனங்கள் என்ற பெயரைத் தரித்தவர்கள். கிறிஸ்துவுக் குள் மறுபடி பிறந்தவர்கள். வேறுபிரிக்கப்பட்ட வாழ்க்கை வாழ அழைக்கப்பட்டவர்கள். மகா பரிசுத்தருடைய நாமத்தைத தரித்தவர்கள். இந்த உலகத்தின் போக்கிற்கு சற்றும் இடங் கொடாதிருங்கள். தேவனுடைய பரிசுத்தமானது காலத்திற்கு காலம், நாட்டிற்கு நாடு, இனத்திற்கு இனம், சூழ்நிலைக்கு சூழ்நிலை மாறுபடக்கூடியதல்ல. தேவன் பரிசுத்தராகவே இருக்கின்றார். இன்றைய நாட்களிலே, பல மனிதர்கள், தங்கள் சரீரத்தை ஒரு காட்சிப் பொருளாக வைத்துக் கொண்டு, அகம் தூய்மையாய் இருப்பதே அவசியமானது என்று கூறிக் கொள்கின்றார்கள். அகம் தூய்மையாக இருப்பது அவசியம் என்பது உண்மை. ஆனால், யாவரும் காணக்கூடிய புறத்தை நாக ரீகம் என்று பரிசுத்த குலைச்சல் செய்கின்றவன், யாரும் காணாத அகத்தை எப்படி தூய்மையாக காக்க முடியும்? எனவே பிரியமான வர்களே, கர்த்தருடைய நாளுக்கென்று கறை திறை அற்றவர்களாக இருக்கும்படிக்கு எங்கள் ஆவி, ஆத்துமா, சரீரத்தை முற்றிலும் பரிசுத்தமாக காத்துக் கொள்வோம்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே> பரிசுத்த வாழ்வு வாழும்படியாக என்னை வேறு பிரித்தீர். இந்த உலக போக்கின்படியல்ல> உம்முடைய வார்த்தையின்படி பரிசுத்த வாழ்வு வாழும்படி என்னை உணர்வுள்ளவ னா(ளா)க மாற்றும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:2