புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 10, 2020)

தேசத்தின் சுபீட்சம்

2 நாளாகமம் 7:14

என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவ ர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.


“தேசத்தின் ஆளுமையில் இப்படியான மாற்றங்கள் உண்டாகினால் தேசத்திற்கு நன்மை உண்டாகும்” என்று தன்னுடைய அபிப்பிரயாத்தை ஒரு மனிதன் தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டான். பொதுவாக இப்படிப்பட்ட சம்பாஷணைகளுக்கு நாங்கள் எவரும் விதிவிலக்கான வர்கள் அல்ல. நாங்கள் விரும்பும் ஒரு வேட்பாளரோ அல்லது கட்சியோ வெற்றி பெறும் போது நாம் பெரும் ஆரவாரப் படுகி ன்றோம். இவ்வாறன புத்துணர்ச்சிகள் யாவும் ஒரு சில மாதங்களுக்குள் கட ந்து போய்விடுகின்றது. மனிதர்கள் எப் பொழுதுமே தேசத்தின் சமாதானத்தை மற்றவர்களின் பொறுப்பு என்று எண் ணிக் கொள்கின்றார்கள். அதாவது, ஆளுகையில் இருப்பவர்கள் இப்படிச் செய்ய வேண்டும். அல்லது அந்த அதிகாரியானவர் அப்படிச் செய்ததால், நிலைமை இப்படியாக மாறிவிட்டதே. என்று பொதுவாக மற்றவர்கள்மேல் குற்றங்ககளைச் சுமத்தி விடுவது மனித சுபாவமாக இருக்கின்றது. “தேசம் தன் குடிகளின் மூலமாய் தீட்டுப்பட்டது” என்று தீர்கதரிசியாகிய ஏசாயா வழியாக அன்று தேவன் தம்முடைய ஜனங்களுக்கு அறிவித்தார். தேசத்தின் சமாதானம் ஆளுனர்களினால் உண்டா குவதில்லை. சமாதானக் காரணரா கிய இயேசு இல்லாமல் சமாதானம் உண்டாவதில்லை. அந்த சமாதானத்தின் காரணரை அறிந்த நாங்கள் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய எங்களை அர்ப்பணிக்கும் போது, அவர் தேசத்தின் சாபங்களை நீக்கி, சமாதானத்தை அனுகிரகம் செய்வார். எனவே பரிசுத்த வேதாகமத்திலே தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு கூறியது போல, தேவனாலே தெரிந்து கொள்ளப்பட்ட நாங்கள் எங்களைத் தாழ்த்தி, எங்கள் பொல்லாத வழிகளை விட்டு திரும்பி, தேவனுடைய வழிகளிலே நடக்க எங்களை ஒப்புக் கொடுத்து ஜெபிக்கும் போது பரலோகத்திலிருக்கின்ற தேவன், நம் தேசத்திற்கு எப்போதுமே நன்மை செய்வார்.

ஜெபம்:

பரலோக தேவனே, தேசத்திலே நன்மை உண்டாகத் தக்கதாக, என் வழிகளை உம்மிடம் ஒப்படைத்து, உம் வார்த்தையின்படி வாழ எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஆதி 18:23-33

Category Tags: