புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 08, 2020)

நம்மை நித்திய வாழ்விற்க்கென்று நியமித்தார்

1 தெச 5:9

தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறி ஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.


இந்த உலகத்திலே பலர் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று விரும் புகின்றார்கள். அதாவது மற்றவர்கள் தங்கள் வாழ்க்கையில் இடைப் பட்டு புத்திமதிகளையும், ஆலோசனைகள் கூறுவதையும், அதை செய்யாதே அல்லது இதை செய்யாதே என்று கூறப்படும் ஒழுங்கு முறைகள் கட்டளைகளை பலர் விரும்புவதில்லை. இப்படிப்பட்டவர்கள் தங்கள் விருப்பப்படி ஒரு சமுதயாத்தைவிட்டு தங்களுக்கு ஏற்ற பிரகாரமாக வாழக்கூடிய இன்னு மொரு சமுதாயத்தை தேடுகின்றார் கள். அவர்கள் இந்தப் பூமியிலே உயிர்வாழும் நாட்கள் வரைக்கும், அவர்கள் எங்கே சென்றாலும் ஒழுங்கு முறைகளும், கட்டளைகளும் அவர் களை பின்தொடருகின்றது. எடுத்துக் காட்டாக, ஒரு மனிதன் தான் நினை த்த பிரகாரமாக வாகன அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொண்டு, தன் ஈ~;டப்படி நெடுஞ்சாலையில் வாகனங் களை ஓட்டிச் செல்ல முடியாது. இப்படியாக வேலையிலும், பாடசாலையிலும், செல்லும் இடமெங்கும் எவருமே தங்கள்; மனவிருப்பப்படி காரியங்களை மாற்றியமைக்க முடி யாது. மனிதனுடைய வாழ்வானது ஒழுங்கு முறைகளாலும் கட்ட ளைகளாலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. இவைகளைக் குறித்து பல மனிதர்கள் முறையீடு செய்வதில்லை. முறுமுறுப்பதி ல்லை. ஆனால் ஆத்துமாவைக் குறித்த விடயங்களிலும், பரிசுத்தமான வாழ்வு வாழ்வதற்குரிய ஒழுங்கு முறைகளையும் கட்டளைகளையும் குறித்தே மனிதர்கள் முறையீடு செய்கின்றார்கள். முறுமுறுக்கின்றா ர்கள். பிரியமானவர்களே, தேவனுடைய கட்டளைகளை மனதார கை கொள்ளுகின்றவர்கள் முடிவில்லாத வாழ்வை கண்டடைகின்றார்கள். தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமி த்தார். பரலோகத்திலே நித்திய ஜீவனை அடையும்படி யாவரையும் அழைக்கின்றார். ஆனால் இந்த உலகப் போக்குகளோ தேவனுடைய அழைப்பிற்கு எதிராக செயற்பட்டு வருகின்றது. தேவன் தந்த ஒழுங்கு முறைகளையும் கட்டளைகளையும் அசட்டை செய்கின்றது. பகலுக் குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, தேவ ஆலோக னைகளையும், ஒழுங்குகளையும் எங்கள் வாழ்வில் கடைப்பிடிப்போம்.

ஜெபம்:

என் பெலவீனங்களை அறிந்த தேவனே, வேதத்திலுள்ள பரிசுத்தவான்களைப் போல, நானும் என்னைத் தாழ்த்தி, ஒரு புதிய ஆரம்பத்திற்காக காத்திருக்கும் பொறுமையைத் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 3:16