புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 03, 2020)

கர்த்தர் உங்களுக்காய் யுத்தம் செய்வார்

2 நாளாகமம் 20:15

நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங் களுடையதல்ல, தேவனு டையது.


யோசபாத் என்னும் ராஜா யூத ராஜ்யத்தை அரசாண்ட நாட்களிலே, மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோ னியருக்கு அப்புறத்திலுள்ள மனு~ருங்கூட திரளானவர்கள் யோசபா த்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள். அப்பொழுது யோச பாத் ராஜாவும், தேசத்தின் குடிகளும் கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமு கப்பட்டு, கூடினார்கள் அப்பொழுது யோசபாத் ராஜா: யூதா ஜனங்களும் எருசலேமியரும் கூடின சபையிலே நின்று: தேவனைத் துதித்து ஆராதித் தான். “எங்கள் பிதாக்களின் தேவனா கிய கர்த்தாவே, பரலோகத்திலிருக்கிற நீரல்லவோ தேவன்; தேவரீர் ஜாதிகளு டைய ராஜ்யங்களையெல்லாம் ஆளு கிறவர்; உம்முடைய கரத்திலே வல்ல மையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கக் கூடாததென்று”. தேவன் செய்த மகத்துவமான செயல்களை அறிக்கை யிட்டான். அப்பொழுது “இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது.” என்ற தேவனுடைய வார்த்தை ஜனங்களுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யோசபாத் தரைமட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும் கர்த்தரைப் பணிந்துகொள்ளக் கர்த்தருக்குமுன்பாகத் தாழவிழுந்தா ர்கள். கோகாத்தியரின் புத்திரரிலும் கோராகியரின் புத்திரரிலும் இரு ந்த லேவியர் எழுந்திருந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகா சத்தத்தோடே கெம்பீரமாய்த் துதித்தார்கள். யுத்த நாளிலே, துதியை சொல்லுகின்றவர்கள் ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், கர்த்தரை துதித்தார்கள். அவ்வேளையில் எதிரிகள் ஒரு வரோடொருவர் தங்களுக்குள்ளே யுத்தம் செய்து அழிந்து போனா ர்கள். அது போலவே எங்கள் வாழ்க்கையிலும் அலையலையாய் ஏரா ளமான சவால்கள் வந்தாலும், பயப்படாமலும் கலங்காமலும், கர்த் தரை துதிக்க வேண்டும். அவர் செய்த மகத்துவமான கிரியைகளை அறிக்கையிட வேண்டும். கர்த்தர் எங்களோடு இருந்தால், எதிரியாகிய சாத்தானின் சதிகள் எங்களை ஒரு போதும் மேற்கொள்ள முடியாது. கர்த்தர் தம்முடையவர்களுக்காக யுத்தம் செய்கின்றவர். தூய உள்ள த்தோடு தேவனுக்கு துதி ஆராதனையைச் செலுத்துங்கள்.

ஜெபம்:

மகத்துவமுள்ள தேவனே, நான் எண்ணுவதற்கு அதிகமாக எதிரிகளின் சூழ்ச்சிகள் என்னை எதிர்த்து வந்தாலும், கலங்காமல் உம் முடைய மகத்துவங்களை அறிக்கையிட்டு உம்மைத் துதிக்க என்னை பெலப்படுத் தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 4:4