புதிய நாளுக்குள்..

தியானம் (தை 24, 2020)

படைத்தவரை சந்திக்கும் நாள்

1 பேதுரு 5:8

தெளிந்த புத்தியுள்ளவர் களாயிருங்கள், விழித் திருங்கள்;


“இது என்னுடைய சுதந்திரம்” “இது என்னுடைய தெரிவு” என்று நல் லோரும் தீயோரும் கூறுவதை நாங்கள் கேட்டிருக்கின்றோம். அதா வது, நன்மையைக் கண்டடையும்படி தன் வழியை சீர்ப்படுத்திக் கொள் கின்றவன், தேவ வார்த்தையின்படி நடப்பதே என் தெரிவு என்று கூறிக் கொள்கின்றான். அவ்வண்ணமாகவே தேவ வார்த்தைக்கு எதிர்த்து நிற்கின்றவர்களும், தீமை யான வழியை தங்கள் தெரிவு என்று கூறிக் கொள்கின்றார்கள். இவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு அந்நிய ர்கள் அல்ல. இவர்கள் தேவனை அறி ந்த, மனிதர்களின் சந்ததியிலே வந்தவ ர்கள். குறிப்பாக மேற்கத்தைய நாடு களிலே வாழும் மனிதர்களில் பலர், வேதம் எதை பாவம் என்று கூறுகின்றதோ, அவற்றையே துணிகரமா கவும் எந்தவித தயக்கமும் இன்றி தங்களது வாழ்வில் நடப்பித்து, அவைகளை நாட்டின் சட்டங்களாக மாற்றுவதற்கு அயராது உழைக்கின்றார்கள். இதன் விளைவென்னவெனில், தேவன் செய்யாதே என்று கூறும் அலங்கோலங்கள், நாட்டின் சட்டங்களாக மாற்றப்பட்டு வரு கின்றது. “இது நாட்டின் சட்டம், இது என்னுடைய வாழ்க்கை, இது என்னுடைய தீர்மானம்” என்று தங்கள் நிலைகளை உறுதிப்படுத்திக் கொள்கின்றார்கள். வாழ்க்கையை குறித்த சுதந்திரமும், தீர்மானமும் அவரவருடையது. ஆனால் யாவரும் ஒருநாள் படைத்த தேவனை சந்திக்க வேண்டும். அந்நாளிலே மனிதர்களின் தெரிவுகளின் பலன் வெளிப்படும். இவைகளினாலே நாங்கள் சோர்ந்து போகக் கூடாது. எங்கள் விசுவாசம் தளர்ந்து போகாமல், நாங்கள் தெளிந்த புத்தியுள்ள வர்களாகவும், விழிப் புள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். ஏனெ னில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்க லாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். ஆதியிலே எப்படி ஏவாளை வஞ்சித்தானோ, அதே பிரகாரமாக இன் றும் அவன் வஞ்சனை செய்கின்றான். தேவன் ஆகாது என்று விலக்கிவைத்தவைகளை, நீங்கள் செய்தால் என்ன? அதை செய்வதற்கு நாட் டின் சட்டமும் உங்களுக்கு ஆதரவு அளிக்கின்றது என்று கூறுவான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்;. கிறி ஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவ ராயிருக்கிற தேவன்தாமே, அவருடைய நாள் வரைக்கும் எங்களை சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக.

ஜெபம்:

நீதியின் தேவனே, இந்த உலகத்திலே உண்டாயிருக்கும் உம்முடைய வார்த்தைக்கு விரோதமான கேடான காரியங்களை நான் பற்றிக் கொள்ளாதபடிக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்து வழிநடத்து வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தீமோ 1:7