புதிய நாளுக்குள்..

தியானம் (தை 18, 2020)

எங்களை புறம்பே தள்ளாத இயேசு

யோவான் 9:35

இயேசு அவனைக் கண்டபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார்.


தெரு ஓரமாக இருந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்த பிறவி க்குருடனின் கண்களை சுகப்படுத்தினார். அவன் பார்வையடைந்ததை கண்ட பலரும் ஆச்சரியப்பட்டார்கள். ஆனால், அங்கிருந்த யூத மதத் தலைவர்களுக்கு அது விசனமாக இருந்தது. இவர்கள் வேத பிரமா ணங்களை நன்றாகக் கற்றவர்களும், கல்வியறிவுடையவர்களுமாயி ருந்தார்கள். இவர்கள் பாவத்திலிருந்து உலகத்தை மீட்டு இரட்சிக்கும் மெசி யாவின் வரவிற்காக காத்திருந்தவர்கள். ஆனால் இவர்களின் மனக் கண்கள் குருடாயிருந்ததால், மெசியாவாகிய இயேசு அவர்களது மத்தியிலிருந்தும் அவர்கள் அவரை யார் என்று உணர்ந்து கொள்ள முடியாமற் போ னார்கள். யூத மதத் தலைலவர்கள் அந்த ஏழையாகிய மனிதனை அழை த்து: உன் கண்களை திறந்தது யார்? என்று கேட்டார்கள். குருடனாக இருந்த அந்த மனிதன், இயேசு என்பவர் என் கண்களை திறந்தார் என்று கூறினார். அப்பொழுது அவர்கள் இயேசுவைப் பாவி என்றும், அந்த மனிதனை பாவியினுடைய சீ~ன் என்றும் பரியாசம் பண்ணி னார்கள். இந்த மனிதன் பிறவிக் குருடனும், சமுதாயத்தினால் ஒரு பொருட்டாக எண்ணப்படாதவனும், பாவி என்று தள்ளப்பட்டவனும், கல்வி அறிவில்லாதவனுமாக இருந்தான். ஆனால் அவனுடைய மனக் கண்களோ பிரகாசம் அடைந்திருந்தது. கல்வியறிவில்லாத அந்த மனி தன், மதத்தலைவர்களின் அவிசுவாசத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டது மன்றி, இயேசுவானர், தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் இப்படிப்ப ட்ட அற்புதங்களை செய்ய மாட்டாரே என்றான். பாவியாகிய மனிதன் எங்களுக்கு போதிக்கின்றாயா என்று அவனைக் கடிந்து கொண்டு, புற ம்பே தள்ளிவிட்டார்கள். அதை அறிந்த இயேசு மறுபடியும் அவனைத் தேடி வந்து, தான் யார் என்பதை அவனுக்கு வெளிப்படுத்தினார். உல கத்தின் கல்விமான்கள் அந்த மனிதனை பரியாசம் பண்ணி புறம்பே தள்ளினது போல, எங்களையும் தள்ளிவிடலாம். ஆனால் நாங்கள் மன க்கண்கள் திறக்கப்பட்ட அந்த பிறவிக் குருடனைப் போல, எந்தத் தய க்கமுமின்றி, இயேசுவின் சாட்சிகளாக நிற்க வேண்டும். இயேசுவின் மேல் நாம் கொண்டுள்ள விசுவாசத்தை நாங்கள் இந்த உலகத்தின் கல்விமான்கள் முன்னிலையிலும்; நல்ல அறிக்கை செய்ய வேண்டும்.

ஜெபம்:

அரவணைக்கும் தேவனே, இந்த உலகத்திலே தங்களைப் பெரியவர்கள் என்று கூறுகின்றவர்களுக்கு முன்னிலும், உம்முடைய சாட்சிகளாக நாங்கள் நிற்கும்படிக்கு எங்களை பெலப்படுத்தி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:25

Category Tags: