புதிய நாளுக்குள்..

தியானம் (தை 15, 2020)

எதிர்காலத்தை ஜெயிக்கும் நல் வழிகள்

நீதிமொழிகள் 19:20

உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயி ருக்கும்படி, ஆலோசனை யைக்கேட்டு, புத்திமதி யை ஏற்றுக்கொள்.


திருமண வயதையடைந்த மகனுக்கு அவன் பெற்றோர், வாழ்க்கை என்றால் என்ன? வாழ்க்கையில் வரக்கூடிய சவால்கள் என்ன? அவை களை மேற்கொள்ளும்படி அவன் என்ன செய்ய வேண்டும் என்று தயவாக சொல்லிக் கொடுத்தார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த இளைஞன். காலங்கள் மாறிப் போய்விட்டது. இது நவீனயுகம். அப்பா அம்மாவின் காலம் அல்ல என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, தாய் தந் தையரின் ஆலோசனையைக் குறித்து அதிக அக்கறை கொள்ளவில்லை. என க்கு, என்ன செய்ய வேண்டுமென்று என நன்றாகத் தெரியும் என்று, தான் நினைத்த பிரகாரமாகத் திருமண காரி யங்களை முன்குறித்தான். திருமண விழாவுக்குரிய ஒத்திகைகள் நடைபெற்றன. விழாவும் சிறப்பாக நடந்து முடிந்தது. பல ஆண்டுகள் கடந்து சென்ற பின்பு, நான் என் தாய் தந்தையரின் ஆலோசனையைக் கேட்டிருந்தால், வாழ்க்கையிலே அநேக பிரச்சனைகளையும் துன்பங்களையும் தவிர்த்திருக்கலாம் என மனம் வருந்தினான். பிரியமான சகோதர சகோதரிகளே, இந்த பூவு லகிலே, விழாக்களுக்கு ஒத்திகைகளை வைப்பார்கள். ஆனால் வாழ் க்கைக்கு ஒத்திகையை வைக்க யாரால் கூடும். ஒரு கம்பனியிலுள்ள வேலை பிடிக்காவிட்டால், இன்னுமொரு கம்பனியில் வேலைக்கு போய்விடுவேன் என்று சிலர் கூறிக் கொள்வார்கள். அப்படியாக எத்தனை கம்பனிகளை மாற்ற முடியும்? அது போல சிலர் தங்களது வாழ்க்கையையும் இலகுவாக எண்ணி, தங்கள் வாழ்க்கையிலே பெரி தான நோவுகளை உண்டுபண்ணிக் கொள்கின்றார்கள். நாளைய நிலை மையைக் குறித்த நிச்சயமில்லாத வாழ்க்கையிலே, நாளையைப் பற்றி அறிந்த தேவன், எங்களுக்கு வேதப் புத்தகத்தின் வாயிலாக மனிதன் இந்த பூமியிலே வெற்றி வாழ்க்கை வாழ்வதற்குரிய ஆலோசனை களை முன்கூட்டியே தந்திருக்கின்றார். அவைகளின்படி தன் வாழ்வை அமைத்துக் கொள்கின்றவன் ஞானமுள்ளவன்! அவைகளை அசட்டை செய்பவனோ தன் மதியீனத்தினால் தனக்கு பெரும் பாதகங்களை உண்டாக்கிக் கொள்கின்றான். எனவே தேவ ஆலோசனையின் வழி யில் நடந்து இந்தப் பூமியிலே சமாதானமான வாழ்வையும் பரலோக த்திலே நித்திய வாழ்வையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

ஆலோசனைகளின் கர்த்தரே, என் வாழ்நாட்கள் முழுவதும் நான் ஞானமுள்ளவனாக இருக்கும்படிக்கு உமக்குப் பயந்து உமது பிரமாணங்களை கைகொள்ளும்படி எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத் 7:26-27