புதிய நாளுக்குள்..

தியானம் (தை 03, 2020)

எங்கள் சூழ்நிலைகளைப் பார்க்கிலும் நம்மோடு இருக்கும் தேவன் பெரியவர்

2 இராஜாக்கள் 6:16

பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்.


எலிசா என்னும் தேவனுடைய மனுஷனுக்கு உதவியாக, அவனோடே கூட ஒரு மனிதன் இருந்தான். ஒரு சமயம் தீர்க்கதரிசியாகிய எலிசாவும் அவனுடைய வேலைக்காரனும் தோத்தான் என்னும் ஊரிலுள்ள மலையொன்றிலே தங்கியிருந்தார்கள். அப்பொழுது சீரியாவின் ராஜா, எலிசாவை சிறைப்பிடிக்கும்படிக்கு அங்கே குதிரைகளையும் இரதங்க ளையும் பலத்த இராணுவத்தையும் அனு ப்பினான்;. அவர்கள் இராக்காலத்திலே வந்துபட்டணத்தை வளைந்துக் கொண் டார்கள். தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இரா ணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக் கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் எலிசாவை நோக்கி: ஐயோ, என் ஆண் டவனே, என்னசெய்வோம் என்றான். இந்த மனிதன் தன்னுடைய எஜமானனாகிய எலிசா தேவனாலே வல்லமையாக பயன்படுத்தப்பட்டு வரும் தீர்க்கதரிசி என்பதை நன்கு அறிந்திருந்தான். இவர் வழியாக இஸ்ரவேலிலே செய்யப்பட்டு வரும் பெரும் அதிசயங்களையும், அற் புதங்களையும் கண்டிருந்தான். ஆனாலும், பயங்கரங்கள் வாழ்வில் சூழ்ந்து கொண்ட போது, பயம் அவன் உள்ளத்தை ஆட்கொண்டது. அவன் மருண்டு போனதால், விசுவாசக் கண்கள் குருடாயிற்று. அத ற்கு எலிசா: பயப்படாதே, அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான். அப்பொழுது எலிசா விண் ணப்பம் பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண் களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதி ரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான். ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே, “கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.” என்ற வசனத்தை ஒவ்வொரு நாளும் நினைவு கூரு ங்கள். தேவனை பயபக்தியுடன் சேவியுங்கள். ஆபத்துக்கள் சூழும் போது, மருண்டு போகாமல், எங்களோடு இருக்கும் இயேசு, பெரி யவர் என்று விசுவாச அறிக்கை செய்யுங்கள்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, ஆபத்து நாளிலே கலக்கமடைந்து, பின்வாங்கிப் போய்விடாதபடிக்கு விசுவாசத்திலே நிலைத்திருந்து, சூழ்நிலைகளை ஜெயம் கொள்ள என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 34:7