புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 26, 2019)

அழைப்பின் பந்தையப் பொருள்

பிலிப்பியர் 3:14

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொ ருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்


இன்றைய நாட்களிலே, விசுவாசிகள் மத்தியிலே உண்டாகும் பலவித மான அநாவசியமான கருத்து வேறுபாடுகளால் பலர் குழப்பமடைந்து போய்விடுகின்றார்கள். உள்ளான மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்க பட வேண்டும் என்னும் கருப்பொருளை மறந்து, அவசியமற்ற தர்க்க ங்களை உண்டு பண்ணி, சகோதரருக்கிடையிலே, சபைகளுக்கிடையி லே பிரிவினைகளை ஏற்படுத்தி, தங்கள் கரு த்துக்களே சரி என்று நியாயப்படு த்துவதில் அதிக நேரங்களை செலவி டுகின்றார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, தேவனுடைய சித்தத்தை இந்தப் பூமியிலே நிறைவேற்றும்படிக் காய் பந்தைய பொருளின் மேல் கண் களை வைத்து அதை நோக்கி ஓடுங் கள். உதாரணமாக, ஒரு சாரார், இயேசு பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து கொண்டாடுவது தவறு என்று கூறி வருகின்றார்கள். ஆனால், பெரிய வெள்ளியை சந்தோஷத்தோடு கொண்டாட வேண்டும் என்றும் கூறித்தி ரிகின்றார்கள். இவைகளின் தார்ப்பரியம் என்ன? ஒரு கிறிஸ்தவனின் நாளாந்த வாழ்க்கையில் பரிசுத்தமும், பயபக்தியும் வேதம் கூறும் அடிப்படையான அம்சங்கள்;. இந்த உலகத்திலுள்ள தேவனை அறி யாத ஜனங்களைப் போல எந்த ஒரு நாளிலும் நாங்கள களியாட்டத் தில் ஈடுபடுகின்றவர்கள் அல்லர். நாங்கள் கிறிஸ்துவுக்குள் களிகூரு கின்றவர்கள். எனவே கிறிஸ்து இந்தப் பூமியிலே பிறந்த நாளை பரி சுத்த அலங்காரத்தோடு மகிழ்ந்து கொண்டாட வேண்டும். கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்ததின் நோக்கத்தையே மையப்பொருளாக கொண்டி ருக்க வேண்டும். அது ஒரு மகிழ்சியின் நாள்! அதுபோலவே, இயேசு வின் பாடுகளையும் மரணத்தையும் நினைவுகூரும் போது, அவருக்காக நாங்கள் அழுது புலம்புகின்றவர்கள் அல்லர். மாறாக, அவர் எங்க ளுக்காக எத்தனை அகோரமான பாடுகளைப் பட்டார். எத்தகைய மர ணத்தை ஏற்றுக் கொண்டார் என்பதை தியானித்து, நன்றியுள்ள இருத யத்தோடு, அவருடைய பாடுகளின் நோக்கம் எங்களில் நிறைவேறு ம்படி பயபக்தியுடன் அந்த நாட்களை அனுசரிக்கின்றோம். எனவே வேற்றுமையான உபதேசங்களுக்கு இடங்கொடுத்து, முடிவில்லாத தர்க்கங்களில் சிக்குண்டு, மனச் சமாதானத்தை இழந்து போகாமல் ஒவ்வொரு நாளையும் பரிசுத்தத்தோடு அனுசரிப்போம்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, நான் தேவ சாயல் அடைய வேண்டும் என் னும் கிறிஸ்துவின் உபதேசத்தில் தரித்திருக்கவும், அவசியமற்ற தர்க்கங்களில் சிக்கிக் கொள்ளாதபடிக்கும் என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:29